Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?
எம்.பி கனிமொழிக்கு திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசியலும், கட்சியும் உதயநிதிக்கு தான் என்பதை முன்னாள் முதல்வர் கருணாநிதி பாணியில் திட்டவட்டமாக சொல்லி உள்ளார் ஸ்டாலின்.
அண்மையில் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ள கனிமொழிக்கு திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்படுவதாக ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சாதாரண ஒரு கூடுதல் பொறுப்பு, பதவி உயர்வு என்று இதை கடந்து சென்றுவிட முடியாது, இதற்கு பிண்ணனியில் பெரிய அதிகார அரசியல் இருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இந்த இடத்தில் தான் கருணாநிதி பார்முலாவை ஸ்டாலின் பயண்படுத்தியுள்ளதாக சொல்லபடுகிறது..
அதாவது ஒரு உரையில் இரு வேறு கத்திகள் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, தனது இரு மகன்களில் மாநில அரசியலுக்கு ஸ்டாலின், மத்திய அரசியலுக்கு முக. அழகிரி என்று பிரித்து பொறுப்புகளை வழங்கி இருந்தார். ஆனாலும் அழகிரியின் சில எல்லை மீறிய செயல்பாடுகளால், பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது வேறு கதை.
ஆனாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்புமே மு.க அழகிரியை பயண்படுத்தி திமுகவை உடைக்க பல கட்சிகள் திரைமறைவு பேரங்களில் ஈடுபட்டன. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் முக அழகிரியை சமாதான படுத்த, அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸிலிருந்து விலகிக்கொண்டு, கலகம் செய்யாமல் இருந்தார். ஒரு வேலை முக அழகிரி வேறு மாதிரியாக யோசித்து இருந்தால், திமுகவில் நிச்சயம் அது விரிசலை ஏற்படுத்தியிருக்கும்.
அதனால் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்று, முதலமைச்சர் ஆவதற்கு முன்பு வரை, ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டார் அழகிரி.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தான் திமுகவின் எதிர்காலம் என்று உறுதியாகிவிட்டது, அப்படி இருக்கையில் நாளை உதயநிதிக்கு இதுபோன்ற சிக்கல் வரக்கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக உள்ளார்.
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினின் தலைமைக்கு, எம்.பி கனிமொழி ஒரு அச்சுருத்தலாகவே பார்க்கபடுவதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.
காரணம் கருணாநிதியின் வாரிசு, கட்சியில் உதயநிதியை விட சீனியர், படித்தவர். எழுத்தார்வம் மிக்கவர். கட்சியில் உள்ள மற்ற சீனியர்களை அரவணைக்கும் தன்மை கொண்டவர், ஆவேசமடையாமல் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்பவர் என திமுகவினர் மத்தியில் ஸ்டாலினுக்கு அடுத்த படியான இமேஜ் வைத்திருபவர் கனிமொழி.
ஏற்கனவே இளைஞரணிக்கும், மகளிரணிக்கும் அவ்வபோது புகைச்சல் ஏற்படுவதாக செய்திகள் வருவதுண்டு. கட்சியிலும் சில சீனியர்கள், கனிமொழியின் தீவிர ஆதரவாளர்கள்.
அதனால் ஒரு வேலை நாளை உதயநிதி ஸ்டாலின் மீது அதிருப்தி ஏற்பட்டால், திமுகவினர் கனிமொழியின் பின் அணி திரள வாய்ப்பிருக்கிறது.
அதன் காரணமாகவே மாநில அரசியலில் இருந்து தள்ளி, மத்திய அரசியலில் முழு வீச்சில் கவனத்தை செலுத்தும் வகையில் கனிமொழி திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.