ADMK Malarkodi | 23 வருட பகை.. பழிதீர்த்த லேடி தாதா..யார் இந்த மலர்கொடி?
நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் அக்குஸ்டிகளின் பெயர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது..
கடந்த ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்துடன் சேர்ந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதில் பல தாதாக்களின் தலையீடு உள்ளது அம்பலமானது.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலூ,திருவேங்கடம் மட்டுமில்லாமல் அதிமுகவை சேர்ந்த வழ்க்கறிஞர் மலர்க்கொடி, பாஜகவை அஞ்சலை ஆகிய பெண் ரவுடிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதுவும் பெண் தாதாக்களின் தலையீடு உள்ளதாக தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியது.அதிலும் பல ஆண்டு பகையை மனதில் வைத்து கட்டம் கட்டியுள்ளார் அதிமுக மலர்க்கொடி!யார் இந்த மலர்க்கொடி அவரது பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பிரபல வழக்கறிஞரிடம் ஜுனியராக பணியாற்றீ வருபவர் மலர்க்கொடி..இப்போ வழக்கறிஞர் ஆனால் இவரது கடந்த கால கதையோ க்ரைம் பட ஸ்டோரி போல் உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கருதப்படும் அருளின் செல்போன் மற்றும் வங்கி கணக்கின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன் பெரிய தாதாவாக வலம் வந்தவர் தோட்டம் சேகர். அதிமுகவின் மேடைப்பேச்சாளரான தோட்டம் சேகரின் மனைவிதான் இந்த மலர்கொடி. இந்த தம்பதிக்கு அழகு ராஜா பாலாஜி என்று இரு மகன்கள் உள்ளனர். கடந்த 2001 தோட்டம் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஐந்து வயதை கூட தாண்டாத பிஞ்சு குழந்தைகளோடு கணவனை இழந்து நிற்கதியாக நின்றுள்ளார் மலர்கொடி.
எனவே கணவரின் கொலைக்கு பழி தீர்க்க வேண்டும் என்ற சபதத்துடன் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே மனதில் கொலை வெறி தூண்டுதலை ஊட்டி வளர்த்துள்ளார் மலர் கொடி. கணவர் தோட்டம் சேகரை கொன்றதாக கூறப்படும் மயிலை சிவக்குமாரை பழிக்கு பழி வாங்க வேண்டும், அவரை கொலை செய்ய வேண்டும் என்பதே இவரது பிள்ளைகளுக்கு தாய் கொடுத்த முதல் டியூட்டி. இந்நிலையில் ஆண்டுகள் செல்ல மலர்கொடி சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகியுள்ளார். இரு மகன்களும் வளர்ந்து தந்தையை கொன்ற மயிலை சிவக்குமாருக்கு ஸ்கெட்ச் போட்டு வந்தனர். இதை அறிந்து கொண்ட சிவகுமாரோ தனது கூலிப்படை மூலம் 2019 ஆம் ஆண்டு மலர்கொடி மகன் அழகுராஜா சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் மயிலை சிவக்குமார். பின்னர் பெயிலில் வெளியே வந்த சிவகுமார் கடந்த 2021 சென்னை அசோக் நகர் பகுதியில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையில் தானாக முன்வந்து சரண் அடைந்தார் மலர் கொடியின் மகன் அழகு ராஜா. அப்போது அவர் கொடுத்த வாக்குமூலம் தான் திகில் கிளம்பியது நான் குழந்தையாக இருந்தபோது என் தந்தை தோட்டம் சேகர் வெட்டி கொல்லப்பட்டார். அந்த கொலைக்கு பழி தீர்க்கவே சிவகுமாரை கொன்றேன் என அதிர்ச்சி வாக்கும் மூலம் அளித்தார். அவ்வாறு மகனை வைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரை கொன்றவரை பலி தீர்த்தவர் தான் இந்த அதிமுக வழக்கறிஞர் மலர் கொடி.
தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இவரது பங்கு என்னவென்றால் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கூலிப்படை கும்பலுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்துள்ளார் மலர் கொடி. இந்த விஷயம் வெளியே தெரிய வர அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மலர் கொடியின் கணவரை கொன்ற மயிலை சிவக்குமாருக்கு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாக இருந்த காரணத்தினாலும் இந்து கொலையில் மலர்கொடி சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது