Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோ
[11:57 AM, 22/10/2024] Cheems: தனது மனைவிக்கு நடந்த பிரசவத்தை வீடியோவாக பதிவு செய்து சர்ச்சையில் சிக்கிய யூடியுபர் இர்பனின் செயல் மன்னிக்க முடியாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ள நிலையில் மருத்துவத்துறை சார்பில் கொடுத்த புகாரில் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சரின் இந்த கருத்தால் இவ்வழக்கானது தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே யூடியூபர் இர்ஃபான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் யூடியூபர் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தையின் பாலினத்தை பிறக்கும் முன்பே வெளியிட்டு பல சிக்கல்களில் சிக்கினர். இதற்காக மன்னிப்பு கடிதத்தை இர்பான் எழுதிய பிறகே அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை கைவிட்டது.
இந்த நிலையில் தனது மனைவிக்கு குழந்தை பிறந்த போது இர்ஃபானும் தனது மனைவியின் பிரசவ அறையில் உள்ளே இருந்துள்ளார். தாயின் உடலில் இருந்து குழந்தையை பிரிக்கும் நிகழ்வாக மருத்துவர்கள் தொப்புள் கொடியை வெட்டுவர். ஆனால் இங்கு இர்பானே தனது மனைவியின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டியுள்ளார். இர்பானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் யூடிபர் இர்பான் மீதும் இந்த வீடியோவை பதிவு செய்ய அனுமதித்த மருத்துவமனை மற்றும் பணியாளர்கள் மீது மருத்துவ துறை சார்பில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து யூடியுபர் இர்பானிடம் மருத்துவத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ள்து. அவரின் விளக்கம் சரியாக இல்லை என்றால் இர்பான் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவித்தனர்.
மேலும் இர்பானின் வீடியோவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இருந்து தற்போது நிக்கியுள்ளார்.
காவல்துறையும் தனது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனு அவரது செயல் மன்னிக்க முடியாதுய் என்று கூறியுள்ள நிலையில் யூடியுபர் இர்பானுக்கு பெரிய சிக்கலை தற்போது ஏற்ப்படுத்தியுள்ளது.
[11:57 AM, 22/10/2024] Cheems: சென்னை பட்டினப்பாக்கத்தில் மதுபோதையில் ஒரு ஜோடி முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு எனக்கூறி போலீசாரை ஆபாசமாக திட்டும் வீடியோ வைரலானது. இந்த நிலையில் நேற்று போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் வேளச்சேரி அருகே லாட்ஜ் ஒன்றில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் பிடித்தனர். போதையில் போலீசாரை காது கூசும் ஆபாச வார்த்தைகளால் பேசிய சந்திரமோகன் தனலட்சுமி போலீசாரிடம் பம்மிய இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.