மேலும் அறிய

Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ"பிளாஸ்டிக் CHAIR-ல் அதிகாரிகள்!சர்ச்சையில் சிக்கிய TVK MLA

தவெக MLA சிம்மாசனம் போன்ற சோபாவில் உட்கார்ந்து கொண்டு அரசு அதிகாரிகளை பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்து ஆலோசனை மேற்கொண்டது சர்ச்சையில் சிக்கியுள்ளது. உங்கள் இஷ்டத்திற்கு அதிகாரிகளை வீட்டிற்கு வரவைத்து பேசலா என கனிமொழி சந்தோஷை தவெகவினரே வெளுத்தெடுத்து வருகின்றனர். 

கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் 42,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்பாக இந்தத் தொகுதியில் நடைபெற்ற 3 தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்ட தவெக MLA-க்கள் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்னைகள் தொடர்பாக களத்துக்கே சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் MLA கனிமொழி சந்தோஷ், அவராகவே ஒரு பதிவிட்டு வம்பில் சிக்கியுள்ளார். அவரது பதிவில், ‘கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களை சந்தித்து, தொகுதியில் பொதுச் சுகாதார சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவது, தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்படுவது, கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவது, நோய் தடுப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவது மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதார வசதிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவது குறித்து விரிவாக கலந்துரையாடினேன். மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, தேவையான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்களுக்கு வலியுறுத்தினேன்” என தெரிவித்திருந்தார்.

இதனுடன் பதிவிடப்பட்டிருந்த புகைப்படத்தில் கனிமொழி சந்தோஷ் பிரமாண்ட ஷோபாவிலும் அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் சேரிலும் உட்கார்ந்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் அரசு அதிகாரிகளை உரிய மரியாதையுடன் நடத்தாமல் மகாராணி போல் சோபாவில் உட்கார்ந்திருப்பதாக கொந்தளித்து வருகின்றனர். மக்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தும் போது அலுவலகத்திலோ அல்லது களத்திற்கோ நேரில் செல்ல வேண்டும், அதைவிட்டு வீட்டிற்கு வரவைத்து கட்சி பெயரை கெடுக்காதீர்கள் என தவெகவினரே திட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget