மேலும் அறிய

4 ஏக்கரில் பிரமாண்ட ரிசார்ட்! அனுமதி வழங்கியதில் மெகா முறைகேடா? பகீர் கிளப்பும் முழு பின்னணி!

கோவையில் யானைகளின் வலசைப் பாதையில் உள்ள ரிசார்ட்டுகள் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ அனைத்துச் சான்றுகளையும் பெற்றுவிட்டதாக தவறான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

கோவையில் யானைகளின் வலசைப் பாதையில் உள்ள ரிசார்ட்டுகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டார்சா என்ற ரிசார்ட்டுக்கு மட்டும் அதிகாரிகள் மறைமுக ஆதரவு அளிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் உள்ள வனப்பகுதிகளில் மற்றும் யானைகளின் வலசைப் பாதையில் ரிசார்ட்டுகள் நடத்தப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கில் கள ஆய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க கடந்த 
கள ஆய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.   

தேதிகளில் முரண்பாடு? வெடிக்கும் சர்ச்சை 

கடந்த அக்டோபர் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 8 ரிசார்ட்டுகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் 2 ரிசார்ட்டுகள் அனுமதி பெற்றுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இவற்றில் அனுமதி பெற்றதாகக் கூறப்படும் 2 ரிசார்ட்டுகளும் ஒரு மாதத்துக்கு முன்னர் அரசுத் துறைகளின் அனுமதியை பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்படியானால், அவர்களின் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு அனுமதி பெற்றதாக மாவட்ட நிர்வாகம் கூறிய ரிசார்ட்டுகளில் கோவை சோமையனூரில் இயங்கி வரும் 'டார்சா' என்ற ரிசார்ட்டும் ஒன்று. இந்த ரிசார்ட் அனுமதி பெற்றதாக கூறப்படும் தேதியும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்த தேதிகளும் முரண்பாடாக இருப்பதாக சமூக ஆர்வலர் கூறுகின்றனர்.

விதிமீறல் புகார்

முதலில் டார்சா ரிசார்ட் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பெயரில் இருந்தது. பின்னர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இந்த இடம் அமைந்துள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி ஆகியவை 'மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின்' (Hill Area Conservation Authority - HACA) அதிகார வரம்புக்குள் வருகின்றன. இங்கு கட்டுமானத்தைத் தொடங்குவதற்குவேளாண்மைத் துறை, பொறியியல் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, வனத் துறை மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோரிடமிருந்து 'தடையில்லா சான்றிதழ்' (NOC) பெறப்பட வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல் சுமார் 4 ஏக்கரில் ரிசார்ட் கட்டுமானப் பணிகளை டார்சா நிறுவனம் முடித்துவிட்டது என  சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

அரசியல் பின்னணியா?

இதுதொடர்பாக, கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி நஞ்சுண்டாபுரம் ஊராட்சித் தலைவர் வி.கே.வி. கார்த்திகேஸ்வரி அறிவிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக  கட்டுமானப் பணிகள் டார்சாவில் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னணியில் அரசியல் புள்ளிகள் உள்ளதாக சூழல் ஆர்வலர்கள் கூறி வந்தனர். 

டார்சா ரிசார்ட்ஸ் வளாகத்தில் தங்குமிடம், உணவகம், மாநாட்டு அரங்கம், மதுக்கூடம் (bar), 1300 நபர்கள் தங்கும் வகையில் பிரமாண்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பான கட்டடங்களைப் பார்த்தாலே உரிய அனுமதியை பெறவில்லை என்று தெளிவாக தெரியும். ஆனால், மாவட்ட நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு ஆணையம் அறிவுறுத்தியிருந்தது" என்கிறார். 

ஆர்.டி.ஐ தகவல்

இது குறித்துப் பேசிய கோவையைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் ஒருவர், "கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் புகார் தொடர்பாகப் பதிலளித்த மாவட்ட வன அலுவலர், ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி கோரி டார்சா நிறுவனம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் (HACA) விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார். இதன் மூலமே அவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் கட்டடங்களைக் கட்டியது உறுதியாகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆவணங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. ஆனால், மாவட்ட நிர்வாகமோ அனைத்துச் சான்றுகளையும் பெற்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தவறான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது" என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

விசாரணைக்கு கோரிக்கை

எனவே, இந்த விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து நீதிமன்றம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க டார்சா ரிசார்ட் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (13-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (11-11-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-11-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் – மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் எவை?
கோவையில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் – மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் எவை?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு" - திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்!
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
Anbil Mahesh:”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
Chennai Corporation: சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்
சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்
Embed widget