மேலும் அறிய

Haryana BJP : காலைவாறும் EX-அமைச்சர்கள் திணறும் ஹரியானா பாஜக! வெடித்த உட்கட்சி பூசல்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஹரியானாவில் பாஜகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிருப்தியாளர்களுடன் மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியையில் முடிந்தது இது பாஜக-வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட உடனேயே அக்கட்சிக்குள் மோதல் வடித்துள்ளது. 67 பெயர்களை கொண்ட பாஜகவின் முதல் கட்ட பட்டியலில் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பெயர்கள் விடுபட்டது சர்ச்சைக்கு உள்ளானது.

மேலிடத்தில் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பாஜக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா, சட்டமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் தாஸ் நாபா..பாஜக விவசாயிகள் அணித் தலைவர் சுக்விந்தர் செரோன், ஓபிசி அணித் தலைவர் கரந்தேவ் கம்பேஜ்..பாஜக முக்கிய நிர்வாகியான ஷம்ஷேர் சிங் கர்காரா உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து அடுத்து அடுத்து வெளியேறியுள்ளனர். அதிருப்தி தலைவர்களை சமாதானம் படுத்தும் பாஜகவின் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. பாஜக ஓபிசி அணித் தலைவர் கரந்தேவ் கம்பேஜை சந்திக்க சென்ற ஹரியானா முதலமைச்சர் நயாப் சைனியுடன் கைக்குடுக்க கூட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதே போல அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர்லால் கட்டாரின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அதே நேரத்தில் கரந்தேவ் கம்போஜ் காங்கிரஸ் மூத்த நிர்வாகியான பூபேந்திர சிங் ஹூடாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹாரியானாவின் விளையாட்டு துறை அமைச்சர் சஞ்சய் சிங்கும் பாஜக தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் சுயேட்ச்சியாக களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார். மின்துறை அமைச்சர் ரஞ்சித் சவுதாலா தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக எம் பி நவீன் ஜிண்டாலின் தாயாரான சாவித்திரி ஜிண்டாலும் பாஜக வேட்பாளருக்கு எதிராக சுயேட்ரியாக களமிறங்க திட்டமிட்டு வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளது கட்சிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?
Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Mohan G :
"விஜய் சார் தப்பான வழியில போறாரு.. வருத்தமா இருக்கு.." : விஜய் பற்றி இயக்குநர் மோகன் ஜி
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
Embed widget