BSP New TN Leader : ஆம்ஸ்ட்ராங்கின் மனசாட்சி..BSP-யின் புதிய தலைவர்.. யார் இந்த ஆனந்தன்?
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக பதவி வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில், புதிய தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து, மாநில தலைவரை தேர்வு செய்வதற்கான செயற்குழு கூட்டம் சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் சித்தார்த் மற்றும் கோபிநாத் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநில தலைவராக யாரை தேர்வு செய்வது? தேசிய தலைமை யாரை அறிவிக்க உத்தரவிட்டது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், வழக்கறிஞர் ஆனந்தனை புதிய மாநில தலைவராக தேர்வு செய்வதாக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதோடு, கொலையான முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில துணை தலைவராக இளமான சேகர், மாநில பொருளாளராக கமலவேல்செல்வன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவரான ஆனந்தன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2009- மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் ஆனந்தன் போட்டியிட்டு 41000 வாக்குகளுக்கு மேல் பெற்று தோல்வி அடைந்தார். 2006-ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து செயல்பட்டு வந்த ஆனந்தன் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜராகி எல்லா வழக்கில் இருந்து அவரை விடுவித்தவர் ஆனந்தன். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 1992 முதல் 1997 வரை சட்டம் படித்தவர் ஆறு மாதம் ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றி பின் தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்களை உருவாக்கி வருகிறார்.
சுயமரியாதை திருமணம் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து போராளி சுயவரையா அதை திருமணம் செல்லும் என்ற உத்தரவை பெற்றவர் ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறார்வெளியூரிலிருந்து வந்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக தங்கும் இடமும் உலகம் வழங்கி வருகிறார் இவரது செய்தியை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது