ADMK TVK Alliance | அதிமுக பாஜக கூட்டணியில் தவெக?அமித்ஷா போட்ட ஆர்டர்! விஜய்-க்கு தூது விட்ட இபிஎஸ்
அதிமுக - பாஜக கூட்டணிக்குள் தவெகவை எப்படியும் இழுத்துவிட வேண்டும் என்று இபிஎஸ் காய் நகர்த்தி வருகிறாராம். இது தொடர்பாக பாஜக அல்லாதவர்களை வைத்து விஜய்க்கு இபிஎஸ் தூது விடுவதாக சொல்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடைபெற உள்ள சூழலில் தேர்தலை சந்திக்க கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் திமுக தற்போது இருக்கும் கூட்டணியுடனே தேர்தலை சந்திக்க உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் இன்னும் பல கட்சிகள் நம் கூட்டணிக்கு வரும் அது தொடர்பாக நான் பேசி வருகிறேன் தொண்டர்கள் கூட்டணி பற்றி யோசிக்காமல் களத்தில் இறங்கி தீவிரமாக வேலை செய்யுங்கள் என்று அதிமுக தொண்டர்களை உற்சாகபடுத்திருக்கிறார்.
இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவை இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியது. முன்னதாக இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ”பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்படாக எனக்குத் தெரியவில்லை. இந்த அரசல் புரசல்கள் பற்றி எனக்கு தெரியவில்லை” என்று கூறினார். அதே நேரம் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் தவெக இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் டெல்லி தலைமை அதிமுகவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் இபிஎஸ் அதற்கான வேலைகளை தீவிரபடுத்தியுள்ளதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதேபோல் இது தொடர்பாக தவெக உடன் இபிஎஸ் பாஜக அல்லாதவர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேலை இந்த கூட்டணி உறுதியானால் அதிமுக 120 இடங்களிலும் மீதி உள்ள 114 தொகுதிகள் பாஜக மற்றும் தவெகவிற்கு பிரித்துக்கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. திமுகவிற்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து ஆட்சியில் இருந்து திமுகவை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து இபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.





















