மேலும் அறிய

“நாட்டு மக்களே நாளை முதல்”மோடி அறிவித்த தீபாவளி பரிசு சிறு வியாபாரிக்கு JACKPOT | Modi Speech on GST

சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் நாளை முதல் அமலாகின்றன. இதுவரை இருந்த 4 வகையான சதவீதத்திலான ஜிஎஸ்டி வரிகள் தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன. இனி, 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு ஜிஎஸ்டி வரிகள் மட்டுமே இருக்கும். இதனால், பல்வேறு பொருட்களின் விலைகளும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து பேசினார்.

புதிய சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் நவராத்திரி முதல் நாளில் அமலுக்கு வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என அறிவித்தார்.  கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டு நடுத்தர மக்களாக மாற்றியுள்ளோம் என பெருமிதம் தெரிவித்த மோடி, வருமான வரியிலும், ஜிஎஸ்டி-யிலும் சலுகை அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதனால், நடுத்தர மக்கள் இனி தங்கள் இலக்குகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தற்போது அமலாகும் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், சிறு கடைக்காரர்கள் கூட பலனடைய முடியும் என தெரிவித்த மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் கார், ஸ்கூட்டர், பொருட்கள் வாங்குவது எளிதாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம், வியாபாரிகள், தொழில் செய்வோர் உள்ளிட்ட அனைவரும் பயனடைவர் என கூறிய பிதமர் மோடி, ஜிஎஸ்டி வரி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும் என குறிப்பிட்டார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்த அவர்,  ஒட்டுமொத்த மக்களும் மொத்தமாக 2.5 லட்சம் கோடி அளவிற்கு சேமிக்க முடியும் என கூறினார்.

மேலும், இந்திய பொருளாதாரத்தின் புதிய அத்தியாயம் நாளை தொடங்குவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொருட்களை முடிந்தவரை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் எனவும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே நாட்டு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்திய தயாரிப்பு பொருட்கள் உலகத் தரம்மிக்கதாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், உள்நாட்டு பொருட்களின் தரம் உலக அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கனவையும் நினைவாக்க உழைத்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.மேலும், உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே, சுயசார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
நெல்லையில் இரட்டைக் கொலை... சென்னையில் கொடூரம்! - மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லையா? அன்புமணி ஆவேசம்!
நெல்லையில் இரட்டைக் கொலை... சென்னையில் கொடூரம்! - மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லையா? அன்புமணி ஆவேசம்!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
Chennai Power Cut: செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் 9 இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கா? - நோட் பண்ணுங்க!
Chennai Power Cut: செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் 9 இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கா? - நோட் பண்ணுங்க!
TVK vs ADMK:
TVK vs ADMK: "துரோகம்.. சுயநலம்.. முதுகில் குத்தியது.." எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து தள்ளிய தவெக
AIADMK: எங்கள் கூட்டணியைப் பற்றி பேச தகுதி இருக்கா?.. தவெகவை சீண்டிய அதிமுக.. காரசார வார்த்தை மோதல்!
AIADMK: எங்கள் கூட்டணியைப் பற்றி பேச தகுதி இருக்கா?.. தவெகவை சீண்டிய அதிமுக.. காரசார வார்த்தை மோதல்!
Embed widget