I.N.D.I.A Protest : மருத்துவ காப்பீட்டுக்கு GST-யா?கொந்தளித்த ராகுல்! பொங்கி எழுந்த இந்தியா கூட்டணி!
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டிற்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடுக்கு மத்திய அரசு 18% சதவீகித ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது இதன் காரணமாக இந்த காப்பீட்டை பயனப்படுத்தும் சந்தாதாரர்கள் கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வரியை முழுவதுமாக ரத்துச்செய்ய கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் பல விதமான பிரச்சனைகள் குறித்து கேள்விகளை எழுப்பி ஆளும் கட்சியான பாஜகவை தினமும் திக்குமுக்காடாக வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற நுழைவாயிலில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பதகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் தாய்மொழியில் மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடுக்கு விதித்துள்ள வரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.