Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் திடீரென கார் வெடித்ததால் அருகில் இருந்த சில வாகனங்களிலும் தீப்பற்றியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலைய நுழைவு வாயில் 1 அருகே கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. டெல்லி தீயணைப்புத்துறையினருக்கு இன்று மாலை 6:55 மணியளவில் வெடிப்பு குறித்து அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஏழு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் 8 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. காரில் இருந்து குண்டு வெடித்ததாக கூறப்படும் நிலையில் இது தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டு வெடித்த சம்பவம் தலைநகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது





















