மேலும் அறிய

சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவு அமமுக காமராஜ் நீக்கம் TTV அதிரடி!

சட்டமன்றத்தில் வெளிப்படையாக தவெக-வுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ காமராஜை டிடிவி தினகரன் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் காமராஜ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு எதிராக களமிறக்கப்பட்ட இவர் சுமார் 68,000 வாக்குகள் பெற்று 1500 வாக்குகள் வித்தியாயசத்தில் வெற்றியும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல், தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத சமயத்தில் காமராஜ் தனது ஆதரவு கடிதம் கொடுத்ததாகவும், அதை ஆளுநரிடம் விஜய் சமர்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகவே, அது போலி கடிதம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவ்வாறிருக்க, சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய காமராஜ், தவெக-வுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் காமராஜை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.

இது குறித்த அறிக்கையில், "காமராஜ் கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.

காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அமமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள், வாக்களித்த மன்னார்குடி வாக்காளர்களுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம்.

ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,

கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்" என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தீபாவளி முடிந்தது: சென்னை திரும்பும் பயணிகள்! மதுரை, கோவை அலைமோதல்... சிவகங்கை வெறிச்சோடல் ஏன்?
தீபாவளி முடிந்தது: சென்னை திரும்பும் பயணிகள்! மதுரை, கோவை அலைமோதல்... சிவகங்கை வெறிச்சோடல் ஏன்?
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
தேனி காவல்துறையில் சோகம்! உயிரிழந்த SI செந்தில்குமாருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!
தேனி காவல்துறையில் சோகம்! உயிரிழந்த SI செந்தில்குமாருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
Embed widget