Arun IPS : கையில பொருள் எடுத்தா..உடம்புல உசுரு இருக்காது!சாட்டையை சுழற்றும் அருண் IPS
புதிய சென்னை கமிஷ்னராக அருண் ஐபிஎஸ் பதவியேற்றுள்ள நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டால் இனி என்கவுண்டர் தான் என திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் குற்றவாளிகளின் குடும்பத்தாரை எச்சரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது..
அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகள் சிலரால் படுகொலை செய்யபட்டார். இதனை அடுத்து சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவியேற்றதுமே அதிரடிகளை தொடங்கிவிட்டார் கமிஷ்னர் அருண்.
அவரின் உத்தரவின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக இரவில் வட சென்னையில் காவல்துறையினர் ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று காவல்துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் மூன்று நாட்களாக ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதில் முக்கியமாக, குற்றப்பிண்ணனி உடைய ரவுடிகளின் வீடுகளுக்கும் விசிட் அடிக்கும் காவல்துறையினர், அவர்களின் குடும்ப உருப்பினர்களிடம் எச்சரித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளியின் வீட்டுக்கு சென்ற காவல் உதவி ஆணையர் இளங்கோ, இப்போது எப்படி இருக்கிறார்.. மீண்டும் தப்பு செயலில் ஈடுபட்டால் கை, கால்கள் உடைக்கபடும்.. மர்டரில் தொடர்பு இருப்பது தெரிந்தால், எண்கவுண்டர் தான் என எச்சரிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதே போன்று பொதுமக்களை மிரட்டுவது, செல்போன் திருடுவது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பல பகுதிகளில் காவல்துறையினர் ரவுடிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுள்ள சூழலில், இன்று காலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவெங்கடம் சுட்டு கொள்ளபட்டுள்ள சம்பவம் அறங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.