Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
கூடுவாஞ்சேரி அருகே மேற்கு வங்க இளைஞர் ஒருவர் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம், அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த மணிமங்கலம் கிராமத்தில், டெல்லியை சேர்ந்த தம்பதியர், நகை அடகு கடை வைத்துள்ளனர். இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே, புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது.
அந்த வீட்டின் கட்டுமான பணிகளுக்கு, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜெய்சாந்த் மண்டல், 32, என்பவர் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார். மாலை வேலை முடிந்த பின், இரவு, அங்கேயே தங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை என்பதால், புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடக்கவில்லை. அப்போது காலை 10 மணி அளவில், டெல்லி தம்பதியரின் 10 வயது மகள், புதிதாக கட்டப்படும் வீட்டின் கட்டுமானங்களுக்குள் சென்று, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் குவியலில் விளையாடி உள்ளார்.
அப்போது, அங்கு தங்கியிருந்த ஜெய்சாந்த் மண்டல், சிறுமியிடம் ஆசையாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பயத்தில் அலறிய சிறுமி, அங்கிருருந்து தப்பி, தன் பெற்றோரிடம் வந்து, நடந்த சம்பவங்களை அழுதபடியே கூறி உள்ளார்.இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஜெய்சாந்த் மண்டலை நேற்று காலை கைது செய்தனர். பின், போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து, நேற்று மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















