மேலும் அறிய

Armstrong Death Rowdy Encounter : ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்..போலீசார் திக் திக் தகவல்..பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசில் சரண் அடைந்த ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றது ஏன்? என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேர் சரண் அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இந்த சூழலில், சரண் அடைந்தவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் இன்று காலை சுட்டுக்கொன்றனர். இந்த சூழலில், ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.போலீசார் அளித்துள்ள விளக்கத்தில், கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை விசாரணைக்காக இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது, மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும்போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை் தேடும்போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டகையில் திருவேங்கடம் பதுங்கினார்.

போலீசார் சுற்றி வளைக்கும்போது ஏற்கனவே அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார். இதையடுத்து, ரவுடி திருவேங்கடத்தை காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ரவுடி திருவேங்கடத்தின் வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்தது.மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். திருவேங்கடம் பதுங்கியிருந்த தகர கொட்டகையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோரை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக அருண் ஐ.பி.எஸ்.-ஐ நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.2

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget