Watch Video: யாரு சாமி நீ..! பிரமாண்ட மலைபாம்பு, அசால்ட்டாக வெறும் கைகளால் பிடித்த இளைஞர் - வீடியோ வைரல்
Python Watch Video: மிகப்பெரிய மலைபாம்பை இளைஞர் ஒருவர் வெறும் கைகளால் கால்வாயில் இருந்து எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Python Watch Video: மலைபாம்பை இளைஞர் ஒருவர் வெறும் கைகளால் கால்வாயில் இருந்து எடுத்த வீடியோவிற்கு, பாராட்டுகளும் எதிர்ப்பும் குவிந்து வருகின்றன.
கைகளால் மலைப்பாம்பை பிடித்த இளைஞர்:
இளைஞர் ஒருவர் பெரிய மலைப்பாம்பை ஒரு கால்வாயிலிருந்து பயமின்றி வெளியே இழுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. பெரும்பாலான மக்கள் தாங்கள் பயணிக்கும் வழியில் ஒரு பாம்பை பார்த்தலே, பயந்து நடுங்கி பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிக்கவே முயல்வார்கள். காரணம் பாம்பென்றால் படையே நடுங்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மையல்லவா. அப்படி இருந்தும், இளைஞர் ஒருவர் கால்வாயில் கிடந்த பெரிய மலைப்பாம்பை, வெறும் கைகளால் பிடித்து வெளியே எடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவை, மூன்றரை கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
View this post on Instagram
பாம்பை பிடிக்கும் வைரல் வீடியோ
விஷால் ஸ்னேக் சேவர் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவின்படி, “ கால்வாய் தண்ணீரில் சுருண்டு கிடந்த பாம்பை அந்த இளைஞர் அமைதியாக அணுகியுள்ளார். ஒரு கம்பியை கொண்டு பாம்பின் உடல் பகுதியை தண்ணீருக்கு வெளியே எடுத்து, தனது காலால் இறுக்கி பிடித்தார். தொடர்ந்து தனது காலை உயர்த்தி வெறும் கைகளாலேயே பாம்பை பிடித்து இழுத்து முற்றிலும் நீரில் இருந்து வெளியேற்றியுள்ளார். அங்கிருந்த மற்றொரு நபரின் உதவியுடன் பாம்பு கால்வாயில் இருந்து வெளியே கொண்டு வர முயல, அங்கு கூடியிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடியுள்ளனர். தொடர்ந்து, கால்வாயின் சுவற்றில் நின்றபடி பாம்பை அந்த இளைஞர் வெளியே இழுக்க, அதுவும் தண்ணீருக்குள் செல்ல அந்த இளைஞரை இழுத்தது. பின்பு ஒருவழியாக அந்த பாம்பை முற்றிலுமாக நீரில் இருந்து எடுத்தது” தொடர்பான காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
பாரட்டுகளும், கண்டனங்களும்:
வைரலாகும் வீடியோவை பார்த்த ஒரு தரப்பினர், இளைஞரின் தைரியத்தை வெகுவாக பாராட்டுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, தண்ணீரில் அமைதியாய் இருந்த பாம்பை பிடித்து சித்திரவை செய்வது ஏன்? இதுபோன்ற நபர்களிடம் இருந்து பாம்புகளை காப்பாற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

