மேலும் அறிய

Travel With ABP: மேகத்தின் பிடியில் உள்ள மேகமலை .. குறைந்த செலவில் ஒரு நாளில் கண்டு ரசிக்க சூப்பர் இடம்..!

Megamalai: மேகமலைக்கு செல்லும் வழியில் சாலையோரங்களில் திராட்சை தோட்டங்களும், தென்னை மரங்களும், காற்றாலைகளும் நிறைந்த கிராமச் சாலைகளில் செல்லும் போதே, மேகங்கள் நம்மை வரவேற்கும்.

Travel With Abp தொடரில் இன்று நாம் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள, மேகமலை என்னும் அழகிய சுற்றுலா தலம் குறித்து பார்க்க உள்ளோம்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேகமலை என்னும் அழகிய மலைக்கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு அழகிய நில அமைப்பை கொண்ட இடம். மேகமலைக்கு செல்லும் வழியில் சாலையோரங்களில் திராட்சை தோட்டங்களும், தென்னை மரங்களும், காற்றாலைகளும் நிறைந்த கிராமச் சாலைகளில் செல்லும் போதே, மேகங்கள் நம்மை வரவேற்கும்.

Travel With ABP: மேகத்தின் பிடியில் உள்ள மேகமலை ..  குறைந்த செலவில் ஒரு நாளில் கண்டு ரசிக்க சூப்பர் இடம்..!

மேகமலைக்கு செல்ல  நேரக்கட்டுப்பாடு

சின்னமனூர் அருகே தென்பழனி என்ற இடத்தில் இருந்து மலைவழிச்சாலை துவங்கும். மேகமலை ஒரு பாதுகாகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் செல்லும் வழியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில்  நமது விபரங்களை பதிவு செய்துவிட்டு செல்ல அறிவுறுத்தியுள்ளது வனத்துறை. மேகமலை செல்வோர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சிரமமின்றி செல்ல வாகன பாதை

மலைப்பாதை வளைந்து நெளிந்து மலையேறும். புதிதாக போடப்பட்ட தார் சாலையில் எந்த சிரமமும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன. பல வருடங்களாக ஒரு சில தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்த போது, குறுகிய சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் வாகனங்கள் செல்ல சிரமத்திற்கு உள்ளாகி வந்தன.

ஆனால், அப்படி இருந்த சாலை அரசிடம் ஒப்படைத்த பின்னர் தான், புதிய தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. 2017 ம் ஆண்டிற்கு பின்னர் போடப்பட்ட தார் சாலைகளால், மேகமலைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

Travel With ABP: மேகத்தின் பிடியில் உள்ள மேகமலை ..  குறைந்த செலவில் ஒரு நாளில் கண்டு ரசிக்க சூப்பர் இடம்..!

ஒவ்வொரு வளைவுகளுக்கும் பூக்களின் பெயர்கள்

மலைப்பாதையில் செல்லும் வழியில் ஆங்காங்கே இருக்கும் சின்ன சின்ன அருவிகள் நம்மை கவரும். மலைவழிச்சாலையெங்கும் கிடக்கும் யானை சாணங்கள் நமக்கு சிறு அச்சத்தை தரும். மேகமலை செல்ல பகல் நேரம் மட்டுமே அனுமதி கிடைப்பதால்  நாம் செல்லும் வழியில் எந்த வன விலங்கும் குறுக்கிடாது. அப்பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அக்கொண்டை ஊசி வளைவுகளுக்கு அழகான பண்டைய தமிழ் பூக்களின் பெயர்கள் வைக்கப்பட்டதும் அதன் பெயர்கள் பொருந்திய பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Travel With ABP: மேகத்தின் பிடியில் உள்ள மேகமலை ..  குறைந்த செலவில் ஒரு நாளில் கண்டு ரசிக்க சூப்பர் இடம்..!

தேயிலை விவசாயம்

இங்கு அதிகளவில் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. தேயிலையும், காபியும் அதிகளவில் இங்கு பயிரிடப்படுகிறது. யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாகவும் மேகமலை உள்ளது. வருச நாடு அருகே இருக்கும் சின்னச் சுருளி இங்கு தான் உற்பத்தியாகிறது. மேகமலையில் மிக உயரமான இடமாக இருக்கும் ஒரிடம் மகாராஜா மெட்டு.

மகா ராஜா மேட்டிற்கு செல்ல டாடா சுமோ போன்ற வாகன வசதி உண்டு. 1000 ரூபாய் முதல் 1500 வரை வசூலிக்கப்படுகிறது.  நமது கார்களை நிறுத்தி விட்டு, அவற்றில் சென்று திரும்பலாம். இரு சக்கர வாகனங்களிலும் செல்ல முடியும்.

Travel With ABP: மேகத்தின் பிடியில் உள்ள மேகமலை ..  குறைந்த செலவில் ஒரு நாளில் கண்டு ரசிக்க சூப்பர் இடம்..!

சுற்றிலும் தேயிலைத் தோட்டங்களுக்கு ஊடாக கரடு முரடான மண் சாலைகள் ஏறி இறங்கி, வளைந்து நெளிந்து செல்லும். மகாராஜா மேட்டிற்கு செல்ல வனத்துறை நபர் ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இப்படி பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி  இயற்கையின் பேரழகை குறைந்த செலவில் கண்டு இரசிக்க ஒரு இடமானது மேகமலை. அதிக எதிர்பார்ப்புகள் இன்றி ஒரு முறை சென்று வரலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Neeraj Chopra: பாவோ நுர்மி விளையாட்டு போட்டி - தங்க மகன் நீரஜ் சோப்ரா மீண்டும் அசத்தல்
Neeraj Chopra: பாவோ நுர்மி விளையாட்டு போட்டி - தங்க மகன் நீரஜ் சோப்ரா மீண்டும் அசத்தல்
Chennai Rain: நள்ளிரவில் சென்னையில் கொட்டிய கனமழை.. மாறிய கிளைமேட், தணிந்த வெப்பம்..!
Chennai Rain: நள்ளிரவில் சென்னையில் கொட்டிய கனமழை.. மாறிய கிளைமேட், தணிந்த வெப்பம்..!
Shreyas Iyer: விரைவில் ஜிம்பாப்வே, இலங்கைக்கு எதிரான தொடர்.. மீண்டும் இந்திய அணியில் கேப்டனாக திரும்பும் ஷ்ரேயாஸ்..?
விரைவில் ஜிம்பாப்வே, இலங்கைக்கு எதிரான தொடர்.. மீண்டும் இந்திய அணியில் கேப்டனாக திரும்பும் ஷ்ரேயாஸ்..?
Rasipalan:மிதுனத்துக்கு நன்மை;விருச்சிகத்துக்கு மகிழ்ச்சி -இன்றைய ராசிபலன்கள்!
Rasipalan:மிதுனத்துக்கு நன்மை;விருச்சிகத்துக்கு மகிழ்ச்சி -இன்றைய ராசிபலன்கள்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!Covai CCTV : பாதாள சாக்கடையில் தவறி விழுந்த இளம்பெண்! திடுக் காட்சிகள்..Sellur Raju : ”நான் விஜய் FAN?அவர் MGR மாதிரி” செல்லூர் ராஜூ புகழாரம்K. R. Periyakaruppan  : ”பயந்து நடுங்கும் அதிமுக EPS தகுதியான தலைவரா?” பெரிய கருப்பன் தாக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Neeraj Chopra: பாவோ நுர்மி விளையாட்டு போட்டி - தங்க மகன் நீரஜ் சோப்ரா மீண்டும் அசத்தல்
Neeraj Chopra: பாவோ நுர்மி விளையாட்டு போட்டி - தங்க மகன் நீரஜ் சோப்ரா மீண்டும் அசத்தல்
Chennai Rain: நள்ளிரவில் சென்னையில் கொட்டிய கனமழை.. மாறிய கிளைமேட், தணிந்த வெப்பம்..!
Chennai Rain: நள்ளிரவில் சென்னையில் கொட்டிய கனமழை.. மாறிய கிளைமேட், தணிந்த வெப்பம்..!
Shreyas Iyer: விரைவில் ஜிம்பாப்வே, இலங்கைக்கு எதிரான தொடர்.. மீண்டும் இந்திய அணியில் கேப்டனாக திரும்பும் ஷ்ரேயாஸ்..?
விரைவில் ஜிம்பாப்வே, இலங்கைக்கு எதிரான தொடர்.. மீண்டும் இந்திய அணியில் கேப்டனாக திரும்பும் ஷ்ரேயாஸ்..?
Rasipalan:மிதுனத்துக்கு நன்மை;விருச்சிகத்துக்கு மகிழ்ச்சி -இன்றைய ராசிபலன்கள்!
Rasipalan:மிதுனத்துக்கு நன்மை;விருச்சிகத்துக்கு மகிழ்ச்சி -இன்றைய ராசிபலன்கள்!
Rajinikanth: போறது BMW கார்.. இருக்குறது போயஸ் கார்டன்.. நான் எளிமையானவனா? - வைரலாகும் ரஜினி வீடியோ!
போறது BMW கார்.. இருக்குறது போயஸ் கார்டன்.. நான் எளிமையானவனா? - வைரலாகும் ரஜினி வீடியோ!
Kalaignar Kanavu Illam: ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
9 Years of Eli: படுகுழியில் தள்ளிய வடிவேலு படம் .. 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்ட இயக்குநர்!
படுகுழியில் தள்ளிய வடிவேலு படம் .. 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்ட இயக்குநர்!
Vijayakanth: கடனில் சிக்கிய பொன்னம்பலம்.. கர்ணனாக வந்து கைகொடுத்த விஜயகாந்த்..!
கடனில் சிக்கிய பொன்னம்பலம்.. கர்ணனாக வந்து கைகொடுத்த விஜயகாந்த்..!
Embed widget