Muthukadu Floating Restaurant: இன்று முதல்.. இசிஆரில் சூப்பர் ஸ்பாட் ! முட்டுக்காடு செல்ல ரெடியா மக்களே !
Seanz Cruise : " சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காட்டு மிதவை உணவக (Floating Restaurant) இன்று திறக்கப்படுகிறது "
Muttukadu Floating Restaurant Opening Date: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் முன்னணி மாநிலமாக மாறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருவாய் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
முட்டுக்காடு படகு குழாம் - Muthukadu Boat House
சென்னையை பொருத்தவரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், சென்னை கிழக்கு சாலையில் இருக்கும் சுற்றுலா தளங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுற்றுலா பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது. அந்தவகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகின்றது.
முட்டுக்காடு படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் விசை படகுகள், மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் என 30க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்களில் எப்போதும் முட்டுக்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுகிறது வழக்கமாக உள்ளது.
முட்டுக்காடு மிதவை உணவகம் - Muttukadu Foating Restaurant
தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் கப்பல் (Floating Restaurant) சென்னை முட்டுக்காடு பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக உணவக கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் மிதவை உணவகம் - Cruise Resturant
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொதுபங்களிப்பு திட்டத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மிதவை உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த உணவகம் மாலை மற்றும் இரவு நேரங்களில் செயல்பட உள்ளது. குழுவாக உணவு அருந்த விரும்புபவர்கள், நண்பர்களுடன் உணவு அருந்த விரும்புபவர்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், லைவ் பேண்ட் (Live Band), இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த உணவகத்தை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டுக்காடு மிதவை உணவகம் தொடர்பான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. உணவுக்கான விலைப்பட்டியல் மற்றும் குழுவாக உணவு அருந்துவதற்கான விலைப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவின் அடிப்படையில் இந்த மிதவை உணவகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த மிதவை உணவகம் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைத் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.