மேலும் அறிய

Elon Musk Twitter: இனி யூடியூப் வேணாம் போலயே..! டிவிட்டரில் வருகிறது புதிய அப்டேட் - எலான் மஸ்க் அறிவிப்பு

சமூகவலைதள செயலியான டிவிட்டரில் விரைவில் புதிய அப்டேட் ஒன்று வரவுள்ளதாக, அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

சமூகவலைதள செயலியான டிவிட்டரில் விரைவில் புதிய அப்டேட் ஒன்று வரவுள்ளதாக, அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டிவிட்டர் - எலான் மஸ்க்:

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் அந்நிறுவனத்தில் நாள்தோறும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. செலவினங்களை குறைக்க ஊழியர்கள் பணிநீக்கம், வருவாயை அதிகரிக்க வெரிஃபைட் கணக்குகளுக்கு சந்தா வசூலிப்பது உள்ளிட்ட பல மாற்றங்களுடன்,  நீளமான பதிவுகள், வீடியோக்களை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு அப்டேட்களும் செயலியில் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு, பயனாளர்களின் கோரிக்கையை ஏற்றும் டிவிட்டர் செயலியில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் டிவிட்டரில் புதிய அப்டேட் ஒன்று விரைவில் வர உள்ளதை எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார்.

டிவிட்டரில் வீடியோ செயலி:

S-M Robinson எனும் பயனாளர் “எங்களுக்கு உண்மையாகவே ஸ்மார்ட் டிவிகளுக்கான டிவிட்டர் வீடியோ செயலி தேவை. டிவிட்டரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான வீடியோக்களை எங்களால் பார்க்க முடியவில்லை” என கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், "அது வந்து கொண்டிருக்கிறது" என குறிப்பிட்டு இருந்தார். ”இதை நான் பாராட்டுகிறேன். யூடியூப் சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்யும் அந்த நாளை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். இனி நான் அதை திரும்பி கூட பார்க்கமாட்டேன்” என ராபின்சன் குறிப்பிட்டு இருந்தார்.

யூடியூப் செயலிக்கு போட்டி:

யூடியூபில் காண்பதை போலவே பல்வேறு விதமான வீடியோக்களையும், அந்த புதிய டிவிட்டர் வீடியோ செயலி மூலம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் உலகம் முழுவதும் இந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. 

விளம்பரம் மூலம் வருவாய்:

கண்டண்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பரங்கள் மூலமாக வருவய் ஈட்ட வழிவகை செய்யப்படும் என அண்மையில் டிவிட்டர் நிறுவனம் அறிவித்தது. அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் எனவும், முதற்கட்டமாக இந்த சேவைக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெரிஃபைட் கணக்குகளை கொண்டுள்ள பயனாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேர வீடியோ பதிவேற்றம்:

வெரிஃபைட் கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 8 ஜிபி வரையிலான 2 மணி நேர நீளத்திற்கான வீடியோக்களை பதிவிடலாம், என்ற அம்சமும் அண்மையில் பயன்பாட்டிற்கு வந்தது. முன்னதாக 60 நிமிட வீடியோக்களை மட்டுமே அதிகபட்சமாக பதிவிட முடிந்தது. அதோடு, முன்னதாக நீளமான வீடியோக்களை வெப்சைட் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்தது. ஆனால் தற்போது ஐஓஎஸ் செயலியில் இருந்தும் நிளமான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடிகிறது. அதேநேரம், பதிவேற்றம் செய்யக்கூடிய வீடியோவின் அதிகபட்ச தரம் என்பது தற்போதும் 1080p ஆகவே உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Thangam Thenarasu Vs Keerathana: அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
US Iran War: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Thangam Thenarasu Vs Keerathana: அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
US Iran War: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
கேடு கெட்ட கொளத்தூர்வாசிகள்... மக்களை கேவலமாக பேசிய முன்னாள் அமைச்சர் - இதெல்லாம் நியாயமா?
கேடு கெட்ட கொளத்தூர்வாசிகள்... மக்களை கேவலமாக பேசிய முன்னாள் அமைச்சர் - இதெல்லாம் நியாயமா?
Hyundai Venue Hybrid: இத.. இததான் எதிர்பார்த்தோம்.! 30 கிமீ மைலேஜ்; ரூ.11 லட்சம் பட்ஜெட்; கலக்கலான ஹூண்டாய் வென்யூ ஹைப்ரிட்
இத.. இததான் எதிர்பார்த்தோம்.! 30 கிமீ மைலேஜ்; ரூ.11 லட்சம் பட்ஜெட்; கலக்கலான ஹூண்டாய் வென்யூ ஹைப்ரிட்
CM Vijay: சென்னையை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்? மழையில் தத்தளிப்பதில் தப்புமா தலைநகர்?
CM Vijay: சென்னையை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்? மழையில் தத்தளிப்பதில் தப்புமா தலைநகர்?
Leema Rose vs EPS : என் மேல நடவடிக்கையா.!? அப்போ வாங்குனதை திருப்பி கொடுங்க- இபிஎஸ்யை கதற விடும் லீமா ரோஸ்
என் மேல நடவடிக்கையா.!? அப்போ வாங்குனதை திருப்பி கொடுங்க- இபிஎஸ்யை கதற விடும் லீமா ரோஸ்
Embed widget