இந்தியாவில் வெகுவிரைவில் வெளியாகும் ’டிரையம்ப் ட்ரைடெண்ட் 600’ - சிறப்பம்சங்கள், விலை விவரம் என்ன?
டிரையம்ப் ட்ரைடென்ட் 600 என்னும் இந்த மாடல் அந்த நிறுவனத்தின் குறைந்த விலை பைக் வெர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
பைக் நிறுவனங்களை பொறுத்தவரை டிரையம்ப் நிறுவனம் மிகவும் இளமையான ஒன்று. 1980-களின் தொடக்கத்தில் லண்டனை தலைநகரமாக கொண்டு இந்த பைக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனுடைய விலைப்பட்டியல் சற்று அதிகமாக காணப்படுவதால் இந்திய சந்தையில் இந்த பைக்கின் தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது என்று கூறலாம்.
இந்நிலையில் டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் கவாசகி இசட் 650 மாடலுக்கு போட்டியாக டிரையம்ப் ட்ரைடென்ட் 600 என்ற மாடலை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. டிரையம்ப் ட்ரைடென்ட் 600 என்னும் இந்த மாடல் அந்த நிறுவனத்தின் குறைந்த விலை பைக் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தின் வழியாக ஏப்ரல் 6-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள இந்த வண்டியின் தொடக்கவிலை 6 முதல் 7 லட்சம் (இந்திய மதிப்பில்) என்பது குறிப்பிடத்தக்கது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Triumph Trident officially teased in India 🇮🇳, launch confirmed for 6th April. <a href="https://t.co/bMO0M3D1GA" rel='nofollow'>pic.twitter.com/bMO0M3D1GA</a></p>— MotorBeam (@MotorBeam) <a href="https://twitter.com/MotorBeam/status/1374309194149421060?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
Bluetooth Module வசதியோடு இணைக்கப்பட்ட டி.எப்.டி ஸ்க்ரீன், டபுள் டிஸ்க் பிரேக், டியூப்லெஸ் டயர்களுடன் 600cc என்ஜின் திறன் கொண்டது இந்த ட்ரைடெண்ட். New Euro 5 / BS6 வகையுடன் மூன்று சிலிண்டர் என்ஜின் கொண்டதாக ட்ரைடென்ட் இந்திய சந்தையில் வெளியாக உள்ளது. இணைய வாயிலாக வெளியாகவிருக்கும் இந்த பைக்குகளின் முன்பதிவும் விரைவில் தொடங்கவுள்ளது.