Watch Video | இது என்ன கடலா? இல்ல இன்டெர்ஸ்டெல்லார் ரீமேக்கா? நாசா வெளியிட்ட வைரல் வீடியோ !
நாசா விண்வெளி மையம் சார்பில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
நாசா சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கில் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறது. அந்த வீடியோவில் விண்வெளி தொடர்பான பல ஆச்சரியமான விஷயங்களை அதில் பதிவிட்டு வருகிறது. அந்த வீடியோக்கள் உலகம் முழுவதும் உள்ள பலரை கவர்ந்து வருகிறது. அந்தவகையில் நாசாவின் ஹப்புள் டெலிஸ்கோப் பக்கத்தில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவை, ”இது கடலுக்கு அடியிலா? அல்லது இன்டர்ஸ்டெல்லார் படமா?” என்ற கேள்வியுடன் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த வீடியோவின் உண்மையான விளக்கத்தையும் பதிவிட்டுள்ளது. அதன்படி இந்த வீடியோவில் வருவது ‘காஸ்மிக் ரீஃப்’ எனப்படும் ஒரு விண்வெளி பகுதி. இந்தப் பகுதியில் தான் நட்சத்திரங்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது. இது நம் பூமியிலிருந்து 1.63 லட்சம் ஒலி ஆண்டுகள் தூரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
அந்தப் பகுதியில் ரெட் ஜெயின்ட் நெபூலா, ப்ளூ நெபூலா உள்ளன. அதில் ரெட் ஜெயின்ட் நெபூலாவில் சூர்யனைவிட 10 முதல் 20 மடங்கு பெரியளவில் நட்சத்திரங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அப்பகுதியில் சூர்ய ஒலி கதிர்களின் மூலம் வரும் தூசிகளும் இருப்பதாக நாசா கூறியுள்ளது. இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு 76ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோவிற்கு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:கொரோனாவுக்கு எதிரான போரில் சுவிங்கம் - விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!