Vivo X Fold 3 Pro: இந்தியாவில் Vivo-வின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது அறிமுகம்? புதுசா என்ன இருக்கு?
Vivo X Fold 3 Pro: விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போனாக, X Fold 3 Pro மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Vivo X Fold 3 Pro: விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போனாக, X Fold 3 Pro மாடல் அறிமுகம் தொடர்பான விளம்பரங்கள் ஃபிளிப்கார்ட் செயலியில் இடம்பெற தொடங்கியுள்ளன.
விவோ X Fold 3 Pro மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்:
பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான Vivo தற்போது சீன சந்தையில் மடிக்கக்கூடிய போன்களை மட்டுமே விற்பனை செய்கிறது. இந்நிலையில் தான், Vivo X Fold 3 என்ற தனது முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியை, இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக Flipkartல் ஒரு மைக்ரோசைட்டும் நேரலைக்கு வந்துள்ளது. இதற்கு 'The Best Fold Ever' என்ற டேக் லைன் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளியீட்டிற்கான சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிமுகப்படுத்தப்பட்டால், இந்த போன் Flipkart இல் கிடைக்கும். இந்த மாடல் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.
X Fold 3 Pro ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்:
இதுவரை வெளியானா தகவல்களின்படி, Vivo X Fold 3 Pro ஜூலை மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம். சீனாவில் இதன் விலை 9,999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் ஆகும். நம் நாட்டில் இதன் விலை ரூ.1.3 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். விலை அதற்குக் கீழே குறைந்தால், சீன வேரியண்டில் வழங்கப்படும் சில அம்சங்கள் இந்திய மாடலில் இடம்பெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.
X Fold 3 Pro போட்டித்தன்மை:
விவோ கடந்த சில ஆண்டுகளாகவே பல மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அவை அனைத்தும் சீன சந்தைக்கு மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் Vivo தனது மடிக்கக்கூடிய தொலைபேசியை முதன்முறையாக வெளிப்புற சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. Vivo X Fold 3 Pro ஆனது Samsung Galaxy Z Fold 5, OnePlus Open மற்றும் Techno Phantom V Fold போன்ற மடிக்கக்கூடிய போன்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமையக் கூடும்.
வடிவமைப்பு & சிறப்பம்சங்கள்:
X Fold 3 Pro மாடலானது கார்பன் ஃபைபர் கீல் மற்றும் V3 இமேஜிங் சிப்பைக் கொண்டுள்ளது. Qualcomm Snapdragon 8 Gen 3 செயலியில் வேலை செய்யும் இந்த போன், ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OriginOS 4 இயங்குதளத்தில் இயங்கும். 8.03-இன்ச் 2K ரெசல்யூஷன் பிரைமரி டிஸ்ப்ளே மற்றும் 6.53-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது 16 GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1 TB வரை UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
தொலைபேசியின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. பிரதான கேமரா 50 மெகாபிக்சல்கள். வெளிப்புற மற்றும் உள் காட்சிகள் இரண்டும் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராக்களைக் கொண்டுள்ளன. அதன் பேட்டரி திறன் 5700 mAh ஆகும், Vivo Xfold 3 Pro ஆனது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் லாஸ்லெஸ் ஹை-ஃபை ஆடியோ, டால்பி விசியன், HDR10+ மற்றும் ZREAL உள்ளிட்ட தொல்நுட்ப அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.