OnePlus Nord 4: வெளியீட்டுக்கு முன்பே கசிந்த தகவல்கள் - புதிய ஒன்பிளஸ் நார்ட்4 ஸ்மார்ட் ஃபோனில் என்ன இருக்கிறது?
OnePlus Nord 4: ஒன்பிளஸ் நிறுவனத்தின் நாட் 4 மாடல் ஸ்மார்ட் ஃபோனின் பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்கள், அறிமுகத்திற்கு முன்பே கசிந்துள்ளன.
OnePlus Nord 4: ஒன்பிளஸ் நிறுவனத்தின் நாட் 4 மாடல் ஸ்மார்ட் ஃபோனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்ஃபோன்:
OnePlus நிறுவனம் அதன் கோடைகால வெளியீட்டு நிகழ்வு, வரும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி நடைபெறும் என உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் OnePlus Nord 4 மாடல் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியீட்டிற்கு முன்பே கசிந்துள்ளன. நிறுவனம் 'நார்ட்' என்ற பெயரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு டீஸ் செய்துள்ளது. எனவே புதிய போன் மலிவு விலை நார்ட்-வரிசையின் ஒரு பகுதியாக இருக்கும் என்பது தெளிவாகிறது.
வெளியீட்டு நிகழ்வுக்கு முன்பே, இந்தியாவில் OnePlus Nord 4 இன் விவரக்குறிப்புகள், ஹேண்ட்-ஆன் படங்கள் மற்றும் விலை ஆகிய தகவல்கள் கசிந்துள்ளன. மெட்டல் கிளாஸ் யூனிபாடி டிசைனுடன் புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி தெரிவித்துள்ளார். கசிந்த ஹேண்ட்ஸ்-ஆன் படம், இந்த போனின் பின் பேனலில் இரட்டை கேமரா அமைப்பு கொடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போனின் பின் பேனலில் கேமரா பம்பர் இருக்காது.
OnePlus Nord 4 அம்சங்கள் என்ன?
OnePlus ஸ்மார்ட்போனில் 6.74-இன்ச் OLED Tianma U8+ டிஸ்ப்ளே இருக்கும். இந்த டிஸ்ப்ளே 1.5K தெளிவுத்திறனுடன் கூடுதலாக 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் 2150nits அதிகபட்ச பிரைட்னஸயும் வழங்கும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 14 சாப்ட்வேர் ஸ்கீனைப் பெறும் என்று கூறப்படுகிறது. இந்த போன் 3 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும்.
கேமரா வசதி பற்றி பேசுகையில், 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP IMX355 அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராவுடன் கூடிய இரட்டை கேமரா அமைப்பு பின்புற பேனலில் கிடைக்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, Nord 4ல் 16MP செல்ஃபி கேமரா இருக்கும். ஃபோனின் 5500mAh பேட்டரி 100W வேகமாக சார்ஜிங்கிற்கான திறனை கொண்டுள்ளது.
OnePlus Nord 4 இன் விலையாக இருக்கும்?
Nord 4 இந்திய சந்தையில் ரூ.31,999 ஆரம்ப விலையில் வெளியிடப்படும் என்றும் அமேசானில் கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் சமீபத்தில் Nord CE 4 Lite-ஐ துணை-20,000 விலைப் பிரிவில் கொண்டு வந்துள்ளதால், வங்கிச் சலுகைகளுடன் கூடிய போனின் விலை சுமார் ரூ.30,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.