ரூ.100 பட்ஜெட்டில் உருவாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் -2!
நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கான பூஜை விழா நடைபெற்றது. ஹூட்டிங் தொடங்கியுள்ளது.
வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சுந்தர் சி இயக்குகிரார். நயன்தாரா அம்மனாக நடிக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி தயாரித்து, இயக்கி நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’.
மூக்குத்தி அம்மன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் தாணு, நடிகைகள் குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி, யோகி பாபு, கருடா ராம், கேஎஸ் ரவிக்குமார், ரெஜினா, அபிநயா உள்ளிட்ட பலர் திரைப்பிபலங்களும் பங்கேற்றனர்.
மூக்குத்தி அம்மன் படத்தில் யோகி பாபுவும் இணைந்துள்ளார்.
சுந்தர் சி இயக்கிய அரண்மனை படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை அவர் இயக்கினால் இன்னும் பிரபலமாகும் என்று தயாரிப்பாளர் தெரிவித்தார்.
சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மூக்குத்தி அம்மன் -2 வெளியீட்டிற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மூக்குத்தி அம்மன் -2 திரைப்பட பூகை விழாவில் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் எல்.முருகன் உடன் மத்திய அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர்.