மேலும் அறிய

iPhone Discount on Feb.14: லவ்வர்ஸ்-க்கு அடித்த ஜாக்பாட்; பிப்ரவரி 14-ல் ஐபோன்களுக்கு இவ்ளோ தள்ளுபடியா.?; ரெடியாகுங்க

காதலர் தினத்தன்று ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஐபோன் 17 தொடர் முதல் மேக்புக்ஸ் வரையிலான தயாரிப்புகளில் 10,000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த நிகழ்வை குறிக்கும் வகையில், ஆப்பிள் ஒரு சிறப்புத் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஐபோன் 17 தொடர், மேக்புக் ஏர் மற்றும் ஏர்போட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களில் ஆப்பிள் குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகை, ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கிறது. ஆப்பிள் இந்த சாதனங்களின் விலைகளை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் சலுகைகள் மூலம் தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்த சாதனத்திற்கு எவ்வளவு தள்ளுபடி.?

வாடிக்கையாளர்கள் MacBook Air M4-ல் 10,000 ரூபாய் சேமிக்கலாம். 99,900 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 13-இன்ச் மாடலை, இப்போது 89,900 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த கேஷ்பேக் சலுகை, ICICI, Axis மற்றும் American Express உள்ளிட்ட பல கிரெடிட் கார்டுகளுக்கு செல்லுபடியாகும். இதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட MacBook Pro மாடல்களிலும் 10,000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால், M4 MacBook Pro-வின் விலை 1,59,900 ரூபாயாகக் குறைகிறது.

ஐபோன் 17 தொடரிலும் தள்ளுபடி

ஐபோன்களை பொறுத்தவரை, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 தொடரில் 5,000 ரூபாய் உடனடி கேஷ்பேக்கை வழங்குகிறது. இதன் மூலம், நிலையான ஐபோன் 17-ஐ அதன் அசல் விலையான 82,900 ரூபாய்க்கு பதிலாக, 77,900  ரூபாய்க்கு வாங்க முடியும்.

இதேபோல், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகியவற்றிலும் 4,000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் அணியக்கூடிய பொருட்கள் மற்றும் ஆடியோ தயாரிப்புகளுக்கு 10,000 ரூபாய் முதல் 4,000  ரூபாய் கேஷ்பேக்கையும் வழங்குகிறது.

கூகிள் பிக்சல் 10-த்திலும் தள்ளுபடி பெற வாய்ப்பு

ஐபோனைப் போலவே, வாடிக்கையாளர்கள் கூகிளின் சமீபத்திய பிக்சல் 10-க்கும் தள்ளுபடி பெறுகிறார்கள்.  பிக்சல் 10, இந்தியாவில் 79,999 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அமேசானில் தள்ளுபடியில் உள்ளது. இந்த போன் தற்போது இ-காமர்ஸ் தளத்தில் 71,750 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு, 8,200 ரூபாய் Flat தள்ளுபடி. கூடுதலாக, 2,152 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் விலை 69,598  ரூபாயாகக் குறைகிறது.

 

Frequently Asked Questions

காதலர் தின சிறப்பு சலுகையாக ஆப்பிள் என்ன வழங்குகிறது?

காதலர் தினத்தை முன்னிட்டு, ஐபோன் 17 தொடர், மேக்புக் ஏர் மற்றும் ஏர்போட்ஸ் போன்ற சாதனங்களுக்கு ஆப்பிள் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.

MacBook Air M4-க்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்?

MacBook Air M4-ல் 10,000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கிறது. இதனால், 13-இன்ச் மாடலின் விலை 89,900 ரூபாயாக குறைகிறது.

iPhone 17 தொடரில் எவ்வளவு கேஷ்பேக் வழங்கப்படுகிறது?

iPhone 17 தொடருக்கு 5,000 ரூபாய் உடனடி கேஷ்பேக் கிடைக்கிறது. இதனால், நிலையான iPhone 17-ன் விலை 77,900 ரூபாயாக குறைகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
Embed widget