மேலும் அறிய

Chandrayaan 3: மூன் வாக் சென்ற பிரக்யான் ரோவர்...அடுத்தக்கட்ட மூவ் என்ன? 14 நாட்கள் என்ன நடக்கும்?

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரன் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் கருவி தென்துருவத்தில் 14 நாட்கள் மட்டுமே நிலவில் ஆய்வு செய்யப்போகிறது. நேற்று இந்த ஆய்வுகளை ரோவர் தொடங்கி  இருக்கிறது.  இந்த 14 நாட்கள் என்ன மாதிரியான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள இருக்கிறது என்பதை  பார்க்கலாம்.

தரையிறங்கிய சந்திரயான் -3

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று முன்தினம் மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது. சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்பட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். ரோவரில் இரண்டு அறிவியல் உபகரணங்கள் இருக்கிறது. நிலவின் வேதியியல் கூறுகள், நுண்ணுயிர்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்ய Alpha Particle X Ray Spectrometer (APXS) இருக்கிறது.  அதேபோல, நிலவின் பாறைகளிலும், மணலிலும் ஆய்வு செய்ய  Laser Induced Breakdown Spectroscope (LIBS) இருக்கிறது.

14 நாட்கள் ஏன்? 

நாம் வசிக்கக் கூடிய பூமியை பொறுத்தவரை ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்று குறிக்கிறது. ஆனால் நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கிறது. நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பகலும், அடுத்த 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். இதனால் அங்கு ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் பகல் தொடங்கும் நாளில் லேண்டரை நிலவில் விஞ்ஞானிகள் தரையிறக்கினர். அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி ரோவர் ஆய்வுகளை மேற்கொள்கிறது. நிலவின்  மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் நிலவின் பகல்பொழுதில் 14 நாட்களுக்குள் முடிவிடக்கூடிய வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் இரவாக இருக்ககூடிய நிலையில், லேண்டர் கருவிக்கு சூரிய ஒளிக் கிடைக்காது.  இரவு நீடிக்கும் 14 நாட்களில் நிலவும் உறைபனிக் குளிர் காரணமாக, கருவிகளின் பாகங்களில் விரிசல்கள் ஏற்படலாம். இதனால், லேண்டர், ரோவர் கருவிகள் இயங்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.

இரண்டு வாரங்கள் என்ன செய்யும்?

இந்த இரண்டு வாரங்களும் பிரக்யான் ரோவர் மேற்கொள்ளும் ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளி திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். பிரக்யான் ரோவர் நிலவு குறித்து அனுப்பப்படும் தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அந்த தரவுகள் லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. மின்காந்த அலைகளால் அனுப்பப்படும் தரவுகள், ஒரு வேலை லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படும் முயற்சி தோல்வியடைந்தால் சந்திரயான் 2வின் ஆர்பிட்டர் உள்ளே நுழைந்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பும். சந்திரயான் 2வின் ஆர்பிட்டர் சந்திரயான் 3வுடன் தொடர்பில் இருக்கும். ரோவர் ஆய்வு செய்யும் தரவுகள் லேண்டருக்கும் அனுப்பும் அதே நேரத்தில் சந்திரயான் 2வின் ஆர்பிட்டருக்கும் அனுப்பப்படும்.

நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள காலநிலை தரவுகளை பகுப்பாய்வு செய்து அனுப்பும்.  அதுமட்டுமின்றி, கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளது. ரோவர் மண்ணை குடைந்து, அதிலிருந்து மாதிரிகளை எடுத்து லேசர் மூலம் ஆராய்ந்து பார்க்கும். சந்திரயான் 3 கண்டறியும் ஆய்வுகள் மூலம் இனி விண்வெளி பயணத்திற்கு தேவையான பொருட்களை பூமியில் இருந்தே கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்காது. அதற்கான தளத்தை நிலவிலும் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு, நிலவில் இருக்கும் இயற்கை கனிமங்கள், தனிமங்களை பூமியில் வாழும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Embed widget