மேலும் அறிய

ZIM vs IND T20I: இந்தியா - ஜிம்பாப்வே இடையே இன்று 5வது டி20 போட்டி - ஹராரே மைதானத்தில் கடைசி வெற்றி யாருக்கு?

ZIM vs IND T20I: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் கடைசி மற்றும் 5வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

ZIM vs IND T20I: இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே மோதல்:

ஐசிசி உலகக் கோப்பயை வென்ற மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டி20 போட்டியில் எதிர்பாராத விதமாக இந்திய அணி அதிர்ச்சி தோல்வியுற்ற நிலையில், அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின், கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று நடைபெற உள்ளது.

தொடரை வெற்றியுடன் முடிக்குமா இந்தியா?

இரு அணிகளும் மோதும் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் சோனி லைவ் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் முடிக்க இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற ஜிம்பாப்வே இன்று களம் காண உள்ளது.

பலம், பலவீனங்கள்:

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியில் சொதப்பினாலும், கடைசி மூன்று போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில், 153 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதில் துரத்தி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால் 93 ரன்களையும், கேப்டன் கில் 58 ரன்களையும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதேநேரம், கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் போன்ற மற்ற வீரர்களும் தங்களது நல்ல ஃபார்மில் தொடங்குகின்றனர். பந்துவீச்சில் முகேஷ் குமார், கலீல் அஹ்மத் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோ அதகளம் செய்து வருகின்றனர். இதனால், இந்திய அணியை வீழ்த்துவது ஜிம்பாப்வே அணிக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

நேருக்கு நேர்:

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 9 முறையும், ஜிம்பாப்வே அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் ஹராரே மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால், இன்றைய போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. 180-க்கும் அதிகமான ரன்களை சேர்த்தால், முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றிக்காக போராடலாம்.

உத்தேச பிளேயிங் லெவன்:

இந்தியா: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரல், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது, ரவி பிஷ்னோய்

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவான்ஷே மருமணி, சிக்கந்தர் ராஜா, ஜொனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவெரே, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் நக்ராவா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget