Ilamparthi: உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் யு-14 பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய தமிழக வீரர் இளம்பரிதி
உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் யு-14 பிரிவில் சென்னையைச் சேர்ந்த இளம்பரிதி பங்கேற்று இருந்தார்.
ரூமேனியா நாட்டில் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் யு-14, யு-16, யு-18 என்ற மூன்று பிரிவில் நடைபெற்றது. இதில் இந்திய சார்பில் இளம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் யு-16 பிரிவில் பிரனவ் ஆனந்த் மற்றும் யு-14 பிரிவில் இளம்பரிதி ஆகியோர் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.
இந்நிலையில் யு-14 பிரிவில் சென்னையைச் சேர்ந்த இளம்பரிதி சிறப்பாக விளையாடினார். இவர் முதல் 5 சுற்றுகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். அதன்பின்னர் 11 சுற்றுக்களின் முடிவில் 9.5 புள்ளிகள் பெற்றார். அத்துடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் யு-14 பிரிவில் உலக யூத் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
World Under-14 Champion Ilamparathi A R!! We are so proud of you!!@DrSK_AICF @Bharatchess64 @ianuragthakur @IndiaSports @Media_SAI @PMOIndia pic.twitter.com/NxoUWdPCke
— All India Chess Federation (@aicfchess) September 17, 2022
அதேபோல் யு-16 பிரிவில் இந்தியாவின் பிரனவ் ஆனந்த் 11 சுற்றுகளின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அத்துடன் இந்தத் தொடரில் இவர் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் 76வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
மேலும் படிக்க: "அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பர், போட்டியாளர்..."-ஃபெடரருக்கு நடால் பதிவு..
இளம்பரிதி:
சென்னையைச் சேர்ந்த இளம்பரிதி தன்னுடைய 4 வயது முதல் செஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் தன்னுடைய 5 வயது மற்று 6 மாதங்களில் இருந்த போது 1070 செஸ் தரவரிசை புள்ளிகளை பெற்று இருந்தார். அதன்பின்னர் தன்னுடைய 7வது வயதில் இவர் 1765 புள்ளிகள் பெற்று யு-8 பிரிவில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக வலம் வந்தார். பிரக்ஞானந்தா, நிஹால் சரின் ஆகியோர் தங்களுடைய சிறுவயதில் செய்த சாதனையை இளம்பரிதி நிச்சயம் முறியடிப்பார் என்று பலரும் கருதி வருகின்றனர்.
Congratulations Ilamparthi A R...World Under-14 Champion!!@DrSK_AICF @Bharatchess64 @IndiaSports@Media_SAI @ianuragthakur @PMOIndia @rashtrapatibhvn pic.twitter.com/4QQ9vnQNeR
— All India Chess Federation (@aicfchess) September 17, 2022
சர்வதேச மாஸ்டர் ஷ்யாம் சுந்தரின் பயிற்சியில் இளம்பரிதி செஸ் விளையாட்டில் பங்கேற்று வருகிறார். இவர் தற்போது 2229 தரவரிசை புள்ளிகளை தற்போது வைத்திருக்கிறார். யு-14 பிரிவில் தற்போது உலக யூத் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். விரைவில் செஸ் விளையாட்டில் இந்தியாவின் அடுத்த நட்சத்திரமாக இவர் உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இந்தியாவின் 76வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று பிரனவ் ஆனந்த் அசத்தல்.