World Junior Boxing Championships 2023: உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் கெத்துக்காட்டிய இந்திய அணி.. 3 தங்கம் வென்று அசத்தல்!
யெரெவானில் நடந்த உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.
யெரெவானில் நடந்த உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.
அர்மேனியாவில் உள்ள யெரெவான் நகரில் உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பயல், அர்மேனியாவின் பெட்ரோசியன் ஹெகினேவை வீழ்த்தி இந்திய அணிக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதனை தொடர்ந்து, 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் அப்துல்லாவா ஃபரினோஸையும், 70 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அகன்ஷா 5-0 என்ற கணக்கில் ரஷ்யாவின் டைமசோவாவையும் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர். இதன்மூலம், இந்திய அணி உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்றது.
மேலும் 57 கிலோ எடைப் பிரிவில் வினி, 54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமிஷா, 63 கிலோ எடைப் பிரிவில் ஷிருஷ்டி சாதே, 80 கிலா எடைப் பிரிவில் மேகா, 80 எடைப் பிரிவில் பிராச்சி டோகாஸ் ஆகியோர் அடுத்தடுத்து வெள்ளிப் பதக்கம் வென்று கெத்து காட்டினர். அதனை தொடர்ந்து, 46 கிலோ எடைப் பிரிவில் நேகா லுந்தி, 50 கிலோ எடைப் பிரிவில் பாரி, 66 கிலோ எடைப் பிரிவில் நிதி துல், 75 கிலோ எடைப் பிரிவில் கிருத்திகா ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.
CHAMPIONS 💥😍
— Boxing Federation (@BFI_official) December 5, 2023
Presenting our 3️⃣ gold medalist at the IBA Junior World Boxing Championships 💪
Well done champs 👏#PunchMeinHaiDum #IBAJuniorArmenia#Boxing pic.twitter.com/C1dyYOcNDc
ஆடவர் பிரிவில் ஜதின் (54 கிலோ எடைப் பிரிவு), சாஹில் (75 கிலோ எடைப் பிரிவு), ஹர்திக் பன்வார் (80கிலோ எடைப் பிரிவு), ஹேமந்த் சங்க்வான் (80 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 48 கிலோ எடைப் பிரிவில் சிகந்தர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஓட்டுமொத்தமாக இந்தத் தொடரில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் வென்றது.
26 பேர் கொண்ட அணி 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் என 17 பதக்கங்களை வென்று உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒட்டுமொத்தமாக, 12 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த பதிப்பில் மற்ற நாடுகளை விட அதிகமாக இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.
இந்தியாவின் பதக்கம் வென்றவர்கள்:
பெண்கள்:
- தங்கம் வென்றவர்கள் - பயல் (48 கிலோ), நிஷா (52 கிலோ) மற்றும் அகன்ஷா (70 கிலோ)
- வெள்ளி வென்றவர்கள் - அமிஷா (54 கிலோ), வினி (57 கிலோ), ஷ்ருஷ்டி சாத்தே (63 கிலோ) மேகா (80 கிலோ), பிராச்சி டோகாஸ் (80+ கிலோ)
- வெண்கலம் வென்றவர்கள்- நேஹா லுந்தி (46 கிலோ), பரி (50 கிலோ), நிதி துல் (66 கிலோ) மற்றும் கிருத்திகா (75 கிலோ)
ஆண்கள்:
- வெள்ளி வென்றவர்கள் - ஜதின் (54 கிலோ), சாஹில் (75 கிலோ), ஹர்திக் பன்வார் (80 கிலோ) ஹேமந்த் சங்வான் (80+ கிலோ)
- வெண்கலம் வென்றவர்கள் - சிக்கந்தர் (48 கிலோ)