மேலும் அறிய

Praggnanandhaa: 7 வயதிலேயே சாம்பியன்.. யார் இந்த பிரக்ஞானந்தா.. சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

Praggnanandhaa Profile: உலகக்கோப்பை செஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா குறித்து சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு சர்வதேச அளவில் 22வது இடத்தில் உள்ள பிரக்ஞானந்தா முதல் இடத்தில் உள்ள கார்ல்செனை எதிர்கொண்டார். முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்று என முதல் இரண்டு சுற்றுகள் டிராவில் முடிந்ததால், போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் டை-பிரேக்கர் சுற்று இன்று நடைபெற்றது. 

உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா கவனம் பெறத்தொடங்கியது முதல் அவருடன் கவனம் பெற்ற நபர் பிரக்ஞானந்தா தாயார் நாகலட்சுமி. பிரக்ஞானந்தா ஒவ்வொரு முறை போட்டியில் கலந்து கொள்ளும்போது மிகவும் எதிர்பார்ப்புடன் பிரக்ஞானந்தாவின் வெற்றிக்காக காத்திருந்த அவரின் புகைப்படம் உலகளவில் ட்ரெண்ட் ஆனதும் பிரக்ஞானந்தாவின் பின்னணியை அறிய ஒட்டுமொத்த உலகமும் ஆசைப்பட்டது. பிரக்ஞானந்தாவை இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என மட்டும் நினைக்காமல் அவர் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். 

Praggnanandhaa: 7 வயதிலேயே சாம்பியன்.. யார் இந்த பிரக்ஞானந்தா.. சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

பிரக்ஞானந்தா ஆகஸ்ட் 10, 2005 அன்று சென்னையில் ரமேஷ்பாபு மற்றும் நாகலட்சுமிக்கு மகனாகப் பிறந்தார். அவரது மூத்த சகோதரி வைஷாலியும் ஒரு சதுரங்க வீராங்கனை மற்றும் இரண்டு முறை யூத் சாம்பியனாக இருந்துள்ளார்.

பிரக்ஞானந்தா எப்போது செஸ் விளையாடத் தொடங்கினார்?

அவரது சகோதரி விளையாடுவதைப் பார்த்து விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட பிறகு, 2013 ஆம் ஆண்டில் அவர் தனது 7 வயதில் 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பை  வென்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, ​​செஸ் ப்ராடிஜிக்கான முதல் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி அவருக்கு FIDE மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது. 2015 ஆம் ஆண்டு U-10 பிரிவில் (10 வயதுக்குட்பட்டவர்களுக்கான) மீண்டும் பட்டத்தை வென்றார்.

பிரக்ஞானந்தாவுக்கு சர்வதேச அங்கீகாரம்

பிரக்ஞானந்தா 2016 இல் 10 ஆண்டுகள் 10 மாதங்கள் மற்றும் 19 நாட்களில் இளைய சர்வதேச மாஸ்டர் ஆனார். அடுத்த ஆண்டு 2017 இல் அவர் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர்

2018 ஆம் ஆண்டில் பிரக்னாநந்தா 12 வயது, 10 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் இந்த சாதனையை அடைந்து இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் ஆனார். அவர் இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபனில் லூகோ மொரோனியை வீழ்த்தி இந்த  சாதனையைப் படைத்தார்

மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தல்

2022 ஆம் ஆண்டில், ஆன்லைன் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருக்குப் பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஆனார். உலக சாம்பியனை வீழ்த்திய இளையவரும் இவர்தான் என்ற பெருமையை அப்போது பெற்றார். 

செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர்

18 வயதில், பிரக்ஞானந்தா இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget