![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pro Kabaddi 2023: விறுவிறுப்பான ப்ரோ கபடி... ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்குமா யு.பி.யோத்தாஸ் அணி?
விறுப்பாக நடைபெற்று வரும் ப்ரோ லீக் கபடி போட்டியில் யு.பி.யோத்தாஸ் அணியை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி எதிர்கொள்கிறது.
![Pro Kabaddi 2023: விறுவிறுப்பான ப்ரோ கபடி... ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்குமா யு.பி.யோத்தாஸ் அணி? Today's match predicted playing 7s for UP Yoddhas vs Haryana Steelers Pro Kabaddi 2023, Match 9 Pro Kabaddi 2023: விறுவிறுப்பான ப்ரோ கபடி... ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்குமா யு.பி.யோத்தாஸ் அணி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/c638876019a766b878c64843280ec8d11701835118893571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ப்ரோ கபடி போட்டி:
கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ப்ரோ கபடி லீக் போட்டிகள் நேற்று (டிசம்பர் 2) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில், இதுவரை 8 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதனிடையே, இன்று ப்ரோ கபடி லீக்கின் 9 வது போட்டியில் யு.பி.யோத்தாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக, கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் யு.பி. யோத்தாஸ் அணி யு.மும்பா அணியிடம் 31-34 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் முதல் நாள் நடைபெற்ற போட்டியில் யு.மும்பா அணி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் தங்கள் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது.
அதநேரம், யு.பி.யோத்தாஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டவர் அந்த அணியின் கேப்டன், பர்தீப் நர்வாலின் மோசமான ஆட்டம் தான் என்று விமர்சிக்கப்பட்டது. ஆறு ரெய்டுகள் மட்டுமே சென்ற இவர் அந்த ஆட்டத்தில் மிகவும் மோசமாக விளையாடினார்.
சுரேந்தர் கில் மற்றும் விஜய் மாலிக் ஆகியோர் ஒரு சில புள்ளிகளை அந்த அணிக்கு பெற்றுக்கொடுக்க, அனில் குமார் சிறப்பாக விளையாடினார். அதேபோல், சுமித் மற்றும் நித்தேஷ் குமாரும் நன்றாக விளையாடினார்கள். ஆனாலும், இந்த போட்டியில் தோல்வி அடைந்த யு.பி.யோத்தாஸ் அணி இன்று நடைபெறும் ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாட உள்ளது.
On a 5th day of Season 10 Patna pirates & Haryana Steelers will Play their first Match, Where all 4 teams will be looking for their first win as Telugu Titans & Up Yoddhas coming from first match defeat
— Kabaddi360 (@Kabaddi_360) December 6, 2023
.
.
.
.
.#Prokabaddi #pkl2023 #pklseason10 #TTVsPAT #UPvHS#kabaddi360 pic.twitter.com/m25Hou9mPL
யு.பி.யோத்தாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் போட்டி விவரங்கள்:
போட்டி : UP vs HAR, புரோ கபடி 2023, போட்டி 9
தேதி மற்றும் நேரம் : டிசம்பர் 6, 2023; இரவு 9:00 மணி
இடம் : ட்ரான்ஸ்ஸ்டேடியா, அகமதாபாத்.
நேரடி ஸ்ட்ரீமிங் : டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.
வீரர்கள் விவரம்:
யு.பி.யோத்தாஸ்:
பர்தீப் நர்வால் (கேப்டன்), சுரேந்தர் கில், விஜய் மாலிக், நிதேஷ் குமார், சுமித், நிதின் பன்வார், மற்றும் குர்தீப்/ஹரேந்திர குமார்.
ஹரியானா ஸ்டீலர்ஸ்:
ஜெய்தீப் மற்றும் மோஹித் (கேப்டன்), சித்தார்த் தேசாய், சந்திரன் ரஞ்சித் , ஆஷிஷ், ராகுல் சேத்பால்/மோனு ஹூடா, மற்றும் மோஹித் கலேர்.
மேலும் படிக்க: ICC T20I Rankings: ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியல்.. டாப் 10 க்குள் நுழைந்த ருதுராஜ், பிஷ்னோய்!
மேலும் படிக்க: Pro Kabaddi 2023: பாட்னா பைரேட்ஸை இன்று எதிர்கொள்ளும் தெலுங்கு டைட்டன்ஸ்.. நேருக்கு நேரில் யார் ஆதிக்கம்? எங்கே பார்ப்பது?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)