Theni: பெரியகுளத்தில் 62ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி துவக்கம் - 21 அணிகள் பங்கேற்பு
பெரியகுளத்தில் 62 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம். இவ்விளையாட்டு போட்டியில் இந்திய அளவில் 21 அணிகள் பங்கேற்பு.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் துவங்கியது. மே 15 ஆம் தேதி துவங்கிய இந்திய அளவிலான கூடை பந்தாட்ட போட்டி வரும் 21ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறுகின்றது. இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கெளகாத்தி, ஹைதராபாத், புனே, கொச்சின், சென்னை, புதுடெல்லி, பெங்ளுர், திருவனந்தபுரம், லோனா வாலா, தெலுங்கானா, வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து தலை சிறந்த கூடை பந்தாட்ட வீரர்களை கொண்ட 21 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றது.
நேற்று துவங்கிய போட்டியானது 21 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெருகின்றது. இந்த போட்டிகள் காலை, மாலை முதலாவதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த கூடைப்பந்தாட்ட கழக அணிகள் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இன்றைய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெரியகுளம், திண்டுக்கல், போடி, கம்பம், தூத்துக்குடி, கரூர், உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த அணிகளுக்கு மாநில அளவிலான போட்டிகளில் நடைபெற்றது. இந்திய அளவில் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெரும் அணிகள் லீக் சுற்று போட்டிகளுக்கு பங்கேற்க உள்ளன.
Lyca Productions: திரையுலகில் பெரும் பரபரப்பு... லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை
முதலாவதாக நடைபெற்ற போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப், அணியுடன் உடுமலைப்பேட்டை கூடைபந்தாட்ட கழக அணி மோதியதில், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67க்கு 48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் போடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நெல்லை ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் போடி அணி 76க்கு 58 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணியுடன், சில்வர் ஜூப்ளி கிரீன் அணி மோதியதில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணி 101க்கு 27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
மேலும் சென்னை தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக அணிக்கும், கம்பம் பெனிக் குவிக் கூடை பந்தாட்ட கழக அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக அணி அணி 91க்கு 31 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. தமிழக அளவில் நடைபெறும் போட்டியில் நாளை காலை லீக் சுற்றுகளில் போட்டிகள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து இந்திய அளவிலான போட்டிகள் துவங்கி பகல் மற்றும் மின்னொளியில் இரவு நேர ஆட்டங்களாக நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்