Tamil Thalaivas vs Patna Pirates LIVE: 46 - 33 என்ற புள்ளிகள் கணக்கில் பட்னா பைரேட்ஸிடம் தோல்வியைத் தழுவியது தமிழ் தலைவாஸ்
Tamil Thalaivas vs Patna Pirates LIVE Updates: பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணியின் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
இந்தியாவில் தற்போது 10வது ப்ரோ கபடி லீக் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ப்ரோ கபடி லீக்கில் இம்முறை மொத்தம் 12 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என மொத்தம் 12 அணிகளும் கோப்பைக்காக மல்லுக்கட்டி வருகின்றது.
ஒவ்வொரு அணிக்கும் 22 போட்டிகள்:
இந்த லீக்கில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் மற்ற் அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் அதிகபட்சமாக பெங்களூரு புல்ஸ் அணி மட்டும் 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து, இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இதற்கடுத்து புனேரி பல்தான், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் என 5 அணிகள் தலா 6 போட்டிகளிலும் தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் 5 போட்டிகளிலும் விளையாடி உள்ளது. இதில் இதுவரை குறைந்த போட்டிகளில் விளையாடிய அணி என்றால் அது தமிழ் தலைவாஸ்.
11வது இடத்தில் தமிழ் தலைவாஸ்:
தமிழ் தலைவாஸ் அணிதான் மொத்தம் உள்ள 12 அணிகளில் மிகக் குறைந்த போட்டிகளில் விளையாடிய அணி. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் உள்ளது. அதேபோல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணி என்றால் அது புனேரி பல்தான் அணிதான்.
இந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்து, 26 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அணி என்றால் அது தெலுகு டைட்டன்ஸ் அணிதான். தெலுங்கு டைட்டன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
6வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு:
புள்ளிப்பட்டியலை வைத்துப் பார்க்கும்போது தமிழ் தலைவாஸ் அணிதான் மொத்த அணிகளில் மிகக் குறைவான போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே அணி. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி இன்று அதாவது டிசம்பர் 22ஆம் தேதி நடக்கும் பாட்னா பைரேட்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றியை உறுதி செய்தால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறும்.
இந்த போட்டியின் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதால், ரசிகர்கள் பட்டாளம் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆதரவாக இருக்கும் என்பதால் தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டி மட்டும் இல்லாமல், சென்னையில் களமிறங்கும் 4 போட்டிகளிலும் வெற்றி வாகை சூட அதிக வாய்ப்புகள் உள்ளது.
Tamil Thalaivas vs Patna Pirates LIVE: தோல்வியைத் தழுவிய தமிழ் தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி பட்னா பைரேட்ஸ் அணியிடம் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.
Tamil Thalaivas vs Patna Pirates LIVE: தோல்வியின் பிடியில் தமிழ் தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி பட்னா அணிக்கு எதிராக தோல்வியின் பிடியில் உள்ளது.
Tamil Thalaivas vs Patna Pirates LIVE: 40 புள்ளிகளை எட்டியது பட்னா
பட்னா அணி 40 புள்ளிகளை எட்டியுள்ளது.
Tamil Thalaivas vs Patna Pirates LIVE: மீண்டும் ஆல் - அவுட் ஆன தமிழ் தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதி ஆட்டத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆல் - அவுட் ஆகி உள்ளது.
Tamil Thalaivas vs Patna Pirates LIVE: இரண்டாம் பாதி ஆட்டத்தின் டைம் - அவுட்டின் போது
இரண்டாம் பாதி ஆட்டத்தின் டைம் -அவுட்டின் போது பட்னா அணி 33 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 24 புள்ளிகளும் எடுத்துள்ளது.