Swiss Open 2023: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி - இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது!
Swiss Open: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில், சீனாவின் டாங் கியான், ரென் யூ சியாங் ஜோடியை வீழ்த்தியது.
சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி இணை, சீனாவின் டாங் குயியான் மற்றும் ரென் யூ ஜியாங் இணையை எதிர்த்து விளையாடியனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, விறுவிறுப்புடன் சென்றது.
✅ 1st #BWFWorldTour title of the year
— BAI Media (@BAI_Media) March 26, 2023
✅ First-ever #BWFWorldTourSuper300 title
Proud of you boys @satwiksairaj @Shettychirag04 🥰👌
📸: @badmintonphoto@himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #SwissOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/P38xrTZicR
பேட்மிண்டன் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள சீன இணையை 21-19, 24-22 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.