சம்மதம் தெரிவித்த டிராவிட்... இந்திய கிரிக்கெட் அணியில் ‛கோச்’ ஆகிறார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை டிராவிட் ஏற்க வாய்ப்புள்ளது. இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடரும் முடிவடைகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rahul Dravid set to take over as Team India coach after T20 World Cup
— ANI Digital (@ani_digital) October 16, 2021
Read @ANI Story | https://t.co/Yx9nQqt2Jf#T20WorldCup pic.twitter.com/qPsFvahniP
தேசிய கிரிக்கெட் அகாடமியில் இயக்குனராக இருக்க டிராவிட் விரும்பியதால் அவர் பயிற்சியாளராக இருப்பது குறித்து பல ஊகங்கள் வெளியாகின. இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் டிராவிட்டை அணியின் பயிற்சியாளராக இருக்க சம்மதிக்க வைத்ததாக தனியார் நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”டிராவிட் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் விரைவில் என்.சி.ஏ.வின் தலைவர் பதவியிலிருந்து விலகுவார்" என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் அந்த நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் மாதத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பார் என்று கூறப்படுகிறது. டிராவிட்டின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியான பராஸ் மாம்ப்ரே இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பீல்டிங் பயிற்சியாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
டி 20 உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே மற்றும் விவிஎஸ் லட்சுமணனின் பெயர்களும் அடிபட்டன. ஆனால் இந்த இரண்டு வீரர்களும் இந்த பொறுப்பிலிருந்து பின்வாங்கிவிட்டனர். அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவின் பல முன்னாள் வீரர்களும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக ஆர்வம் காட்டினர். ஆனால் இந்த பொறுப்பை இந்தியருக்கு மட்டுமே கொடுக்க பிசிசிஐ விரும்புகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்