Indonesia Masters 2022: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் தொடரில் இன்று களமிறங்கும் சிந்து, லக்ஷ்யா சென்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடக்கம்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென்,சமீர் வர்மா மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் அகர்ஷி கஷ்யப் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக இந்தத் தொடர் இந்தியாவின் முன்னணி வீரர் வீராங்கனைகளுக்கு சிறந்த பயிற்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் டென்மார்க் வீரர் ஹன்ஸ் சோல்பெர்கை எதிர்த்து விளையாடுகிறார். உலக தரவரிசையில் 9வது இடத்திலுள்ள லக்ஷ்யா சென் தன்னைவிட தரவரிசையில் பின் தங்கியுள்ள வீரரை எதிர்கொள்கிறார். எனினும் கடந்த இரண்டு முறை லக்ஷ்யா சென்னை சோல்பெர்க் வீழ்த்தியுள்ளார். ஆகவே இன்றைய போட்டி அவருக்கு சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. தாமஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு லக்ஷ்யா சென் பங்கேற்கும் தொடர் என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
#IndonesiaMasters2022
— IndiaSportsHub (@IndiaSportsHub) June 8, 2022
Here’s Indian participation at the BWF500 event
Singles
💥Men
👉Lakshya
👉Sameer
💥Women
👉Aakarshi
👉Sindhu
Doubles
💥Men
👉Manu/Sumeeth -Lost
💥Women
👉Ashwini/Sikki-Lost
👉Simran/Ritika-Lost
💥Mixed
👉Ishan/Tanisha
👉Sumeeth/Ashwini pic.twitter.com/vimr4r37Fh
சிந்து vs கிறிஸ்டோபர்சென்:
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து டென்மார்க் வீராங்கனை லின் கிறிஸ்டோபர்செனை எதிர்த்து விளையாட உள்ளார். உலக தரவரிசையில் 4வது இடத்திலுள்ள பி.வி.சிந்து இந்தாண்டு பங்கேற்றுவரும் தொடர்களில் நன்றாக விளையாடி வருகிறார். இவர் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதியில் தோல்வி அடைந்து ஏமாற்றினார். ஆகவே அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு முன்பாக இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லுவார் என்று கருதப்படுகிறது. லின் கிறிஸ்டோபர்சென் இதுவரை பி.வி.சிந்துவை வீழ்த்தியதே இல்லை.
மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா இன்று தன்னுடைய முதல் சுற்று போட்டியில் டிவி வார்டியோவை எதிர்த்து விளையாடுகிறார். அதேபோல் மகளிர் பிரிவில் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முதல் சுற்றுக்கு அகர்ஷா கஷ்யப் முன்னேறினார். அவர் இன்று நடைபெறும் முதல் சுற்று போட்டியில் பெய்வான் ஸெங்கை எதிர்த்து விளையாட உள்ளார். காயம் காரணமாக சாய்னா நேவால், பாரபல்லி கஷ்யப் ஆகியோற் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்