(Source: ECI/ABP News/ABP Majha)
Pele Health: கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை எப்படி இருக்குது...? மீண்டு வருவாரா..?
பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் கால்பந்து வீரர் பீலே (வயது 82) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கீமோதெரப்பி சிகிச்சையில் பலன் அளிக்காததால் தற்போது நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பீலே மருத்துவமனையில் அனுமதி
முன்னதாக, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பீலேவின் மகள் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். பீலேவின் பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சோதனைக்காக வருவது வழக்கம்.
தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதனால், அவர் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்பந்தின் முடிசூடா மன்னன்:
பிரேசிலில் 1940-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தார். கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்குபவர். கால்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் போட்டவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.
அவர் மொத்தம் 92 ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார்.. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒரே கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.
View this post on Instagram
Watch Video: ரசிகர்களுக்கு தலைவணங்கிய உனத்கட்..! விஜய் ஹசாரே கோப்பையை வென்றதால் நெகிழ்ச்சி...
களம் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, சிறப்பாக பந்தை வலைக்குள் தள்ளும் முறை, லாவகமாக இரண்டு-மூன்று தற்காப்பு வீரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தி இலக்கு தவறாமல் பந்தை வலைக்குள் தள்ளும் தந்திரம் என இவரிடம் ஏகப்பட்ட திறமைகள் இருக்கின்றன.