IPL 2021: பலம் பொருந்திய மும்பையை பஞ்சாப் அணி வீழ்த்துமா..?
சரிவில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துமா பஞ்சாப் கிங்ஸ் அணி.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியில் ரோஷித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
பஞ்சாப் அணி முதல் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கடுத்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி இரண்டு போட்டியில் அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரான் என அதிரடி வீரர்கள் இருந்தும் 120, 106 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று வீழ்த்தினால் மட்டுமே, புதிதாக புத்துணர்ச்சி கிடைத்து அடுத்தப்போட்டியில் தெம்பாக விளையாட முடியும். இல்லையென்றால், அந்த அணிக்கு இந்த தொடரில் எதுவும் இல்லாமல் போய்விடும்.
மும்பை இந்தியன் அணியில் பவுலிங் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது. அந்த அணி முதல் போட்டியில், கோலி படையிடம் தோல்வியை தழுவினாலும், அடுத்ததடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் டைர்ஸ் அணியையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் வீழ்த்தியது. கடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோற்றது. வெயிட்டான பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு அதிக ரன்களை குவிக்க தடுமாறி வருகிறது. கடைசி நேரத்தில், பவுலர்களின் அசத்தலான பவுலிங் மற்றும் ரோகித் சர்மா கேப்டன்ஷிப் ஆல் மட்டுமே இதுவரை வெற்றி பெற்றுள்ளது. அதனால், பவுலர்களை கை கொடுப்பதை போல, பேட்ஸ்மேன்களும் கொடுத்தால் நல்லது. பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ஃபார்முக்கு திரும்ப வேண்டும். அவர்கள் திரும்பினால், ஒட்டுமொத்த அணியும் அனைத்து எதிர் அணிகளுக்கும் பயத்தை காட்டலாம்.
சரிவில் இருந்து மீண்டு வர வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் முயற்சி செய்யும். பழைய மும்பை இந்தியன்ஸ் அணியாக திரும்பவேண்டும் என அந்த அணியும் உள்ளது. இதனால், இன்றையப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Friday night’s gonna be a 𝐁𝐈𝐆 𝐇𝐈𝐓 🎆🍿#SaddaPunjab #PunjabKings #IPL2021 #PBKSvMI pic.twitter.com/JdOCY6JLfx
— Punjab Kings (@PunjabKingsIPL) April 23, 2021

மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி 14-இல் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி 11-இல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.