‛நான்வெஜ்’ குவியல்... கண்ணாடி கோப்பைகள்... இணையத்தில் டிவி... ரசனையுடன் இந்தியா போட்டியை பார்த்த பாக்., பிரதமர்!
இடமில்லாத அளவிற்கு நிரப்பி வைக்கப்பட்டிருந்த அந்த உணவுகளை தனக்கு நெருக்கமானவர்களுடன் அமர்ந்த ருசித்தபடி இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இம்ரான் கான் ரசித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டத்தில் முதல் போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. வழக்கம் போலவே பரபரப்பிற்கும், எதிர்பார்ப்பிற்கும் சற்றும் குறைவில்லாத வகையில் போட்டி நடந்து முடிந்தது. இதுவரை உலகக்கோப்பை வரலாற்றி இந்தியாவிடம் தொடர் தோல்வியை தழுவி வந்த பாகிஸ்தான் அணி, நேற்று அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரா வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கூட பாராட்டும் வகையில் பாகிஸ்தான் அணியின் விளையாட்டு இருந்தது. உலகமே உற்று நோக்கிய இந்த கிரிக்கெட் போட்டி, அதன் முடிவுக்கு பின் இன்னும் உலக அளவிலான பேச்சுக்கு ஆளானது. பாகிஸ்தானின் வெற்றியையும், இந்தியாவின் படுதோல்வியையும் இருதரப்பு விமர்சனங்களாக பலரும் முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் தனது மாளிகையில் தனக்கு நெருக்கமானவர்களுடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தார். வெற்றி பெற்ற தன் நாட்டு அணிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் பதிவிட்டுள்ள போட்டோ தான் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இம்ரான் கான் வெளியிட்டுள்ள போட்டோவில், அவர் முன்பு ஒரு டீ பாய் உள்ளது. அது நிறைய அசைவ உணவுகளும், சில கோப்பைகளும் வைப்பட்டிருந்தன. இடமில்லாத அளவிற்கு நிரப்பி வைக்கப்பட்டிருந்த அந்த உணவுகளை தனக்கு நெருக்கமானவர்களுடன் அமர்ந்த ருசித்தபடி இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இம்ரான் கான் ரசித்துள்ளார்.
அலங்கார விளக்குகள் கொண்ட அந்த அறையில், அவர் அமர்ந்திருக்கும் ஷோபாவிற்கு பின்னால் சொகுசு கட்டில் ஒன்றும் உள்ளது. அவர் பார்க்கும் தொலைகாட்சி ஒரு ஸ்மார்ட் டிவி. அதில் கேபிள் இணைப்போ... டிடிஎச் இணைப்போ இல்லை. மாறாக இணையம் மூலமாக பிரவுசரில் போட்டியை பார்த்துள்ளார். அதுவும் அந்த டிவியில் தெரியும் டிஸ்பிளே மூலம் அறிய முடிகிறது. போட்டியை பார்த்து முடித்து, தனது நாட்டு அணி வெற்றி பெற்ற பின் , போட்டியை மெச்சி அவர் அந்த பதிவை போட்டுள்ளார்.
Congratulations to the Pakistan Team & esp to Babar Azam who led from the front, as well as to the brilliant performances of Rizwan & Shaheen Afridi. The nation is proud of you all. pic.twitter.com/ygoOVTu37l
— Imran Khan (@ImranKhanPTI) October 24, 2021
அந்த பதிவில், ‛வாழ்த்துக்கள் பாகிஸ்தான் அணி... குறிப்பாக முன்னால் நின்று அணியை வழிநடத்திய பாபர் அசாமிற்கு என் வாழ்த்துக்கள். சிறப்பாக விளையாடிய ரிஷ்வான் மற்றும் ஷகீன் அப்ரிடி ஆகியோருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள். இந்த நாடு உங்களால் பெருமை கொள்கிறது,’ என்று அந்த குறிப்பில் அவர் கூறியிருந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் பெற்றுள்ள அந்த வெற்றியை அந்நாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு பிரதமர் இம்ரான் கானின் பதிவு முன்னுதாரணம்.