Vinod Kumar wins Medal:டோக்கியோ பாராலிம்பிக்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார் வினோத் குமார்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் நடைபெற்ற ஆடவர் எஃப்-52 வட்டு எறிதலில் இந்தியாவின் வினோத் குமார் பங்கேற்றார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் இந்தியா சார்பில் 24 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் ஏற்கெனவே டேக் சந்த் மற்றும் ரஞ்சித் பாட்டி ஆகிய இருவரும் தங்களுடைய பிரிவில் பதக்கம் வெல்ல தவறினார்கள். இதனால் மற்ற வீரர் வீராங்கனைகளாவது டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்தது. இந்தச் சூழலில் இன்று ஆடவருக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பில் வினோத் குமார் பங்கேற்றார்.
இதில் தன்னுடைய முதல் முயற்சியில் 17.46 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டர் தூரம், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டர் தூரமும் வீசினார். நான்காவது முயற்சியில் 19.12 மீட்டர் தூரம் வீசினார். ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக 19.91 மீட்டர் தூரம் வீசி புதிய ஆசிய சாதனை படைத்தார். தன்னுடைய ஆறாவது வாய்ப்பில் அவர் 19.81 மீட்டர் தூரம் வீசினார். தன்னுடைய அதிகபட்சமான 19.91 மீட்டர் தூரத்துடன் வினோத் குமார் 3ஆவது இடத்தை பிடித்தார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கதையும் வென்று அசத்தினார்.
Vinod Kumar - Remember the name 🤩
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 29, 2021
It's a #Bronze for #IND as his best throw of 19.91m in the Men's Discus Throw F52 final earns the nation their THIRD medal of the day.
P.S - He also set a new Asian record! 🔥#Tokyo2020 #Paralympics #ParaAthletics pic.twitter.com/jv92vZgBDQ
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவருக்கான எஃப்-57 பிரிவு ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் ரஞ்சித் பாட்டி பங்கேற்றார். இதில் தன்னுடைய முதல் முன்று முயற்சியிலும் ரஞ்சித் பாட்டி ஃபவுல் செய்தார். அதன்பின்னர் அடுத்த மூன்ற முயற்சியிலும் அவர் தொடர்ந்து ஃபவுல் செய்தார். இதனால் இறுதிப் போட்டியில் எந்தவித தூரமும் வீசாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதேபோல் ஆடவருக்கான எஃப்-55 பிரிவு குண்டு எறிதலில் பங்கேற்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசியை கொடியை ஏந்திச் சென்றவர் டேக் சந்த் பங்கேற்றார். இந்தப் போட்டியில் தன்னுடைய நான்காவது முயற்சியில் 9.04 மீட்டர் தூரம் வீசினார். இந்த ஆண்டில் அவர் வீசிய அதிகபட்ச தூரம் இதுவாகும். 9.04 மீட்டர் தூரம் மட்டும் வீசி இந்தப் பிரிவில் அவர் 8ஆவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
மேலும் படிக்க:கொரோனா பாதிப்பு டூ ஒலிம்பிக் பதக்கம்- வெள்ளி வென்ற நிஷாத் குமாரின் சாதனைப் பயணம்