Mary Kom Olympic 2020 Exit: போராடி தோற்றார் மேரி கோம்: உணர்ச்சி ததும்ப அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றார்!
இந்த போட்டியின் முதல் சுற்றை வேலென்சியா வென்றார். இரண்டாவது சுற்றை, மேரி கோம் வென்றார். இரு வீராங்கனைகளும் போட்டியை வெல்ல வேண்டுமென்பதற்காக டஃப் கொடுத்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கிலோ),மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ). லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் விகாஸ் கிருஷ்ணன், மணிஷ் கௌசிக், ஆஷிஷ் குமார் ஆகிய மூவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
Mary Kom, you win every time a young girl picks up a pair of boxing gloves! 🥊
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 29, 2021
Take a bow, champ! 🙌#BestOfTokyo | #UnitedByEmotion | #StrongerTogether | #Tokyo2020 @MangteC pic.twitter.com/cDuqoz0h0q
இந்நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், 51 கிலோ எடைப்பிரிவில், இரண்டாவது சுற்றில் இன்று களமிறங்கினார். இந்த போட்டியில், கொலம்பியா வீராங்கனை இங்கிரித் வேலென்சியா விக்டோரியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் சுற்றை வேலென்சியா வென்றார். இரண்டாவது சுற்றை, மேரி கோம் வென்றார். இரு வீராங்கனைகளும் போட்டியை வெல்ல வேண்டுமென்பதற்காக டஃப் கொடுத்தனர். ஆனால், மூன்றாவது சுற்றை மீண்டும் வேலென்சியா வென்றார். இதனால், தோல்வியோடு ஒலிம்பிக் சுற்றில் இருந்து மேரி கோம் வெளியேறியுள்ளார்.
இதற்கு முன்பு, முதல் சுற்று போட்டியில் டொமினிக்கன் குடியரசு நாட்டின் ஹெர்னாண்ட்ஸ் கார்சியாவை எதிர்த்து மோதினார். இந்தப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தினார்.
MARY!!!MARY!!!MARY!!! 💥
— India 🇮🇳 at #Tokyo2020 (@IndiansportFeed) July 25, 2021
India’s legendary MC Mary Kom starts with a 4-1 win against the Dominican Republic boxer.
She is into the pre-quarterfinals. (48-51kg)#Boxing #IndiaAtTokyo2020 pic.twitter.com/5FCnZY7VL0
38 வயதான இந்திய நட்சத்திரம் மேரி கோம் தன்னைவிட 15 வயது குறைவான வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்தடுத்து வரும் சுற்றுகளில் வெற்றிப் பெற்று அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.
38 வயதாகும் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக இவர் தகுதி பெற்றார். அதில் 51 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட மேரி கோம் அரையிறுதில் நிகோலா அடெம்ஸ் இடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2012ஆம் ஆண்டு தங்கம் வெல்ல தவறிய இவர் 2016ஆம் ஆண்டு ரியோவில் வெல்ல வேண்டும் என்று இருந்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இவரால் தகுதி பெற முடியவில்லை. எனினும், இந்த ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ள அவர், ஃபார்மில் இருக்கின்றார் என்பதால் பதக்கத்தை வென்று தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.