India Schedule, Tokyo Olympic 2020: ஒலிம்பிக்கில் இந்தியா நாளை பங்கேற்க இருக்கும் போட்டிகளின் லிஸ்ட்!
நாளை நடக்க இருக்கும் ஹாக்கி காலிறுதி போட்டி, பேன்மிண்டன் விளையாட்டில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பி.வி சிந்து பங்கேற்கும் போட்டி ஆகிய போட்டிகள் கவனிக்க வைப்பவை.
இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, மீரா பாய் சானு வென்று கொடுத்த ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 60-வது இந்தியா இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியா 51வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 21 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலப்பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 16 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நாளை எந்தந்த இந்திய வீரர் வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்?
காலை 4.15 மணிக்கு - குதிரையேற்றம் - ஃபவத் மிர்சா
காலை 6.03 மணிக்கு - கோல்ஃப் - அனிர்பன் லஹிரி
காலை 7.39 மணிக்கு - கோல்ஃப் - உதயன் மனே
Its going to be action packed Super Sunday for #TeamIndia with 2 medal events:
— India_AllSports (@India_AllSports) July 31, 2021
✨ P.V Sindhu | Bronze medal match
✨ Satish Kumar | Boxing Quarters
+
👉 Men's Hockey | India Vs Great Britain
Detailed Schedule 👇 #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/ETvdEU7MIO
காலை 9.36 மணிக்கு - குத்துச்சண்டை - காலிறுதி போட்டி - சதீஷ் குமார் vs உஸ்பெக்கிஸ்தானின் பகோடிர் ஜலோலவ்
மாலை 4 மணிக்கு - பேட்மிண்டன் - பிவி சிந்து vs சீனாவின் ஹி பிஞ்சாகோ
மாலை 4.30 மணிக்கு - ஆண்கள் ஹாக்கி - காலிறுதி போட்டி - இந்தியா vs கிரேட் பிரிட்டன்
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி இன்று தனது கடைசி குரூப் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடியது. இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது. அத்துடன் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக பெரும் மூன்றாவது வெற்றி இதுவாகும்.
இந்திய அணி முதல் குரூப் போட்டியில் நியூசிலாந்து அணியை 3-2 என வென்றது. அதன்பின்னர் இரண்டாவது குரூப் போட்டியில் 7-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. நான்காவது குரூப் போட்டியில் இந்திய அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய அணி நான்கு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடம் பிடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. நாளை நடைபெற இருக்கும் காலிறுதி போட்டியில், கிரேட் பிரிட்டனை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.
நாளை நடக்க இருக்கும் ஹாக்கி காலிறுதி போட்டி, பேன்மிண்டன் விளையாட்டில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பி.வி சிந்து பங்கேற்கும் போட்டி ஆகிய போட்டிகள் கவனிக்க வைப்பவை.