(Source: ECI/ABP News/ABP Majha)
Paris Olympics 2024: போதை பொருள் முதல் பாலினம் வரை.. புதுசு புதுசா சர்ச்சைகளை கண்ட பாரீஸ் ஒலிம்பிக்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெற்றது. அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்போம்
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதேபோல் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது. அதே நேரம் இந்த முறை நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெற்றது. அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்போம்;
விளையாட்டு வீரர் கைது:
வீரர்களுக்காக இந்த முறை ஒலிம்பிக் கிராமம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இங்கு தங்கிய சில வீரர்கள் போதை பொருட்கள் பயன் படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரேக் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் காவல்துறை அறிவித்தது.
வெளியேற்றப்பட்ட வீராங்கனை:
அழகே ஆபத்தில் முடியும் என்பார்கள். அதைப்போல் ஒரு சம்பவமும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்த முறை நடைபெற்றது. இதில் பராகுவே நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ தன்னுடைய பேரழகால் மற்ற வீரர்களின் கவனத்தைச் சிதறடிக்கிறார் என்று கூறி ஒலிம்பிக் கமிட்டி அவரை சொந்த நாட்டிற்கு அனுப்பியது. பராகுவே ஒலிம்பிக் கமிட்டியின் மிஷன் தலைவரான லாரிசா ஷேரர், லுவானா அலோன்சோ உடனே அங்கிருந்து நம் நாட்டிற்கு வர வேண்டும் என்று கூறி இருந்து குறிப்பிடத்தக்கது.
வதந்தி:
பிரான்சின் அந்தோணி அம்மிரத் நான் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் பங்கு பெற்றார். அப்போது அவர் விளையாடிய நேரத்தில் உயரம் தாண்டும் பொழுது அவருடைய பிறப்புறுப்பில் நீளம் தாண்டுதல் கம்பி பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அவர் வேண்டும் என்றே தான் இந்த செயலில் ஈடுபட்டார் என்ற வதந்தி எழுந்தது. ஆனால் இது எதிர்பாரமல் நடந்த சம்பவம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
பாலின சர்ச்சை:
அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் பெண் கிடையாது அவர் ஒரு ஆண் என்று ஜெர்மனி வீராங்கனை குற்றம் சாட்டி இருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இறுதில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் தங்கமும் வென்றார். பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஒரு பெண் தான் என்பதை உறுதி படுத்தினார்கள்.
பாரீஸ் ஒலிம்பிக் இறுதி நாள்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் இறுதி நாளான நேற்று பிரமாண்டமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது லியோனார்டோ டா வின்சியின் "தி லாஸ்ட் சப்பர்" பாடல் காட்சி ஒளிபரப்பட்டது. இது குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் பிரெஞ்சு கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்புகளின் மாநாட்டில் இதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.