Paris Olympics 2024:அடி தூள்.. பாரீஸில் பதக்க வேட்டைக்கு காத்திருக்கும் தமிழ்நாட்டு வீரர்கள்! எத்தனை பேர் தெரியுமா?
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மொத்தம் 117 தடகள வீரர்கள் பதக்க வேட்டையை எதிர்நோக்கி களம் காண உள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் நாளை (ஜூலை 26) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் மொத்தம் 117 தடகள வீரர்கள் பதக்க வேட்டையை எதிர்நோக்கி களம் காண உள்ளனர். இச்சூழலில் எந்ததெந்த மாநிலத்தில் இருந்து எத்தனை வீரர்கள் பங்கேற்கின்றனர் என்ற தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்..
அசாம் 4, ஆந்திர பிரதேசம் 4, பீகார் 1, சண்டிகர் 2, டெல்லி 4, கோவா 1, குஜராத் 2, ஹரியானா 24, ஜார்கண்ட் 1, கர்நாடகா 7, கேரளா 6, மத்திய பிரதேசம் 2, மகாராஷ்ட்ரா 5, மணிப்பூர் 2, ஒடிஷா 2, பஞ்சாப் 19, ராஜஸ்தான் 2, சிக்கிம் 1, தெலுங்கானா 4, தமிழ் நாடு 13, உத்தரகாண்ட் 4, உத்தரபிரதேசம் 7, மேற்கு வங்கம் 3 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து பங்குபெறும் வீரர்கள்:
ஜெஸ்வின் ஆல்ட்ரின் - தடகளம் (ஆண்கள் நீளம் தாண்டுதல்)
பிரவீல் சித்திரவேல் - தடகளம் (ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப்)
ராஜேஷ் ரமேஷ் - தடகளம் (ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
சந்தோஷ் தமிழரசன் - தடகளம் (ஆண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டம்)
சுபா வெங்கடேசன் - தடகளம் (பெண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டம்)
வித்யா ராம்ராஜ் - தடகளம் (பெண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டம்)
நேத்ரா குமணன் - படகோட்டம் (பெண்களுக்கான ஒரு நபர் டிங்கி)
விஷ்ணு சரவணன் - படகோட்டம் (ஆண்கள் ஒரு நபர் டிங்கி)
இளவேனில் வளரிவன் - துப்பாக்கி சுடுதல் (பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள், 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி)
பிருத்விராஜ் தொண்டைமான் - துப்பாக்கி சுடுதல்
சத்தியன் ஞானசேகரன் – டேபிள் டென்னிஸ்
சரத் கமல் - டேபிள் டென்னிஸ் (ஆண்கள் ஒற்றையர், அணி)
என் ஸ்ரீராம் பாலாஜி - டென்னிஸ் (ஆண்கள் இரட்டையர்)