Paris Olympics 2024: தங்கம், வெண்கலப் பதக்கத்திற்காக களமிறங்கும் இந்தியா! இன்று என்னென்ன போட்டிகள்?
ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்காக இன்று நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்திற்கும், இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்திற்கும் களமிறங்குகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் தொடரின் 13வது நாளான இன்று இந்தியா என்னென்ன போட்டிகளில் பங்கேற்கிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.
கோல்ஃப்:
அதிதி அசோக், திக்ஷா டாகர் ( மகளிர் தனிப்பிரிவு ஸ்ட்ரோக்)
மதியம் 12.30 மணி
தடகளம்:
ஜோதி யர்ராஜூ ( 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்)
மதியம் 2.05 மணி
மல்யுத்தம்:
அமன் ஷெராவத் – விளாடிமிர் எகோரோவ் ( வடக்கு மாசிடோனியா)
57 கிலோ ஆடவர் பிரிவு
மதியம் 2.30 மணி ( அவர் வெற்றி பெற்றால் 4.20க்கு காலிறுதி)
அன்ஷூ மாலிக் – ஹெலன் லூயிஸ் ( அமெரிக்கா)
மகளிர் 57 கிலோ
மதியம் 2.30 மணி
ஹாக்கி:
இந்தியா – ஸ்பெயின் ( வெண்கலத்திற்கான மோதல்)
மாலை 5.30 மணி
மல்யுத்தம்:
அமன் ஷெராவத்( ஆடவர்) அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இரவு 9.45 மணிக்கு அரையிறுதி
அன்ஷூ மாலிக் ( மகளிர்) தகுதி பெற்றால் இரவு 10.25 மணிக்கு அரையிறுதிக்கு முன்னேற்றம்
தடகளம்:
நீரஜ் சோப்ரா – ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி
இரவு 11.55 மணி