Lakshya Sen: பாட்மிண்டன் அரையிறுதி சுற்று.. இந்திய வீரர் லக்ஷ்யா சென் தோல்வி! ரசிகர்கள் ஷாக்
பாரீஸ் ஒலிம்பிக் பாட்மிண்டன் அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் தோல்வி அடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் 2024 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை சீனா 37 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் மற்றும் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கலப்பதக்கங்களுடன் 54 வது இடத்தில் உள்ளது.
இந் நிலையில் தான் இந்திய ஹாக்கி அணி இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற காலிறுதி சுற்றில் கிரேட் பிரிட்டன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல் பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.
லக்ஷ்யா சென் தோல்வி:
இதில் உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷ்யா சென், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னுடன் விளையாடினார். இதில் முதல் ஆட்டத்தில் லக்ஷ்யா சென் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: 𝐋𝐚𝐤𝐬𝐡𝐲𝐚 𝐒𝐞𝐧 𝐥𝐨𝐬𝐞𝐬 𝐭𝐨 𝐕𝐢𝐜𝐭𝐨𝐫 𝐀𝐱𝐞𝐥𝐬𝐞𝐧 𝟐𝟎-𝟐𝟐, 14-21 𝐢𝐧 𝐒𝐞𝐦𝐢𝐬. #Badminton #Paris2024 #Paris2024withIAS pic.twitter.com/SCw7w2ejjP
— India_AllSports (@India_AllSports) August 4, 2024
ஆனால் ஆட்ட நேர முடிவில் 20-22 என்ற கணக்கில் இருந்தார். அதேபோல் இரண்டாவது ஆட்டத்தில் 14-19 என்ற செட்டுகளை மட்டுமே பெற்றார். இவ்வாறாக விக்டர் ஆக்சல்சென் பாட்மிண்டன் அரையிறுதி சுற்றில் 20-22 மற்றும் 19-14 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென்னை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.