Paris Paralympic 2024: ஹமாஸ் கொடியால் இந்தியாவுக்கு கிடைத்த 7வது தங்கம் - பதக்க வேட்டையில் வீரர்கள், பாராலிம்பிக் நிலவரம் என்ன?
Paris Paralympic 2024: பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 7வது தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.
Paris Paralympic 2024: இந்திய விரர் நவ்தீப் சிங் பாரிஸ் பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
தங்கமாக உயர்த்தப்பட்ட வெள்ளிப் பதக்கம்:
2024 ஆம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக்ஸ் நேற்று, இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. ஆனால் ஆண்கள் ஈட்டி எறிதல் - எஃப் 41 இறுதிப் போட்டியில் ஈரானின் சடாகே சாயா பீட்டை அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்த பின்னர், இந்திய வீரர் நவ்தீப் சிங்கின் வெள்ளிப் பதக்கம் தற்போது தங்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், சடகே சயா பெய்ட்47.64 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்று இருந்தார்.
இந்த முடிவின் மூலம், 2024 ஆம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியா 7வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியா மொத்தமாகவே, 6 பதக்கங்களை மட்டுமே வென்றது. ஆனால், இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் தங்கமே 7 பதக்கங்களை வென்று ஆச்சரியமளித்துள்ளனர்.
🇮🇳🥈 𝗡𝗔𝗩𝗗𝗘𝗘𝗣 𝗛𝗜𝗧𝗦 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥 in Men's Javelin Throw - F41 Final with a stunning new Personal Best of 47.32, improving from 44.29. He briefly held the Paralympic Record too but got overtaken by Sadegh of Iran in his 5th throw
— Gaurav Pandey (@Statistician400) September 7, 2024
Medal no. 29 for India#Paralympics2024 pic.twitter.com/pF4UEcZUDZ
ஈரான் வீரர் தகுதி நீக்கம் ஏன்?
ஆண்களுக்கான F41 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, ஈரானின் சடகே சயா பெய்ட் காட்டிய செய்கைகள்,மோசமானதாகவும், அச்சுறுத்தலாகவும் மற்றும் பொருத்தமற்றதாகவும் இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது, அவர் கழுத்தை வெட்டுவது போன்று செய்கை காட்டி, ஹமாஸ் கொடியை கையில் தூக்கி காட்டினார். எனவே, R8.1 விதியை மீறியதன் அடிப்படையில் ஈரானியரை தகுதி நீக்கம் செய்தனர்.
BREAKING 🚨🤯
— Gaurav Pandey (@Statistician400) September 7, 2024
Iranian🇮🇷 athlete Beit Sayah Sadegh has been disqualifie for misconduct after initially being given a yellow card for displaying Hamas' flag.
Navdeep Singh’s🇮🇳 silver medal is upgraded to Gold🥇!
India has a seventh gold medal🥇🥇 in Paris!👏🏻🔥#Paralympics2024 https://t.co/OfaKsIzrQT pic.twitter.com/olhh1Su7zl
பதக்கப் பட்டியல் நிலவரம்:
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 இல் இந்தியாவின் சாதனை முறியடிப்பு ஓட்டம், இப்போது அவர்கள் பதக்கப் பட்டியலில் 16 வது இடத்திற்கு முன்னேறி வெள்ளிப் பதக்க எண்ணிக்கையின் அடிப்படையில் ஸ்பெயினுக்குப் பின்னால் உள்ளனர். நமது 9 வெள்ளிப் பதக்கங்களுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பிய நாடு 10 வெள்ளிப் பதக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தியா மொத்தமாக 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என, 29 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.