MAR vs POR, FIFA WC 2022: அரையிறுதியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்க அணி மொராக்கோ.. கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ
ஃபிபா கால்பந்து போட்டியில் மொராக்காேவும், போர்ச்சுகல் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கா அணி வென்றது.
ஃபிபா கால்பந்து போட்டியில் மொராக்கோவும், போர்ச்சுகல் அணியும் மோதின. ரொனால்டோ இடம்பெற்றுள்ள அணி என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் மொரோக்கா அணி, முதல் கோலை பதிவு செய்தது.
போர்ச்சுல் அணி எவ்வளவோ முயன்று பார்த்தும் 90 நிமிடங்கள் முடிவில் போர்ச்சுல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
ஸ்டாப்பேஜ் டைம் கூடுதலாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. எனினும், அந்த கூடுதல் நிமிடத்திலும் போர்ச்சுகலால் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து, மொரோக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
MOROCCO ARE HEADING TO THE SEMI-FINALS! 🇲🇦@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022
இதுவரை மொராக்கோ அணி இந்தத் தொடரில் தோற்கவில்லை. மொராக்கோவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இரண்டாவது பாதியில் களத்தில் இறங்கிய ரொனால்டோ, எவ்வளவோ முயன்றும் ஒரு கோலை கூட போட முடியவில்லை.
இதுதான் ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை கால்பந்து தொடராகும். முக்கியமான ஆட்டமான இதில் போர்ச்சுகல் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கண்ணீருடன் தனது அறைக்குச் சென்றார். அவரை சிலர் ஆறுதல் படுத்தினர். மைதானத்தில் ஒட்டுமொத்த போர்ச்சுகல் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதுவரை அர்ஜென்டீனா, குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
அர்ஜென்டீனாவும், குரோஷியாவும் 14ம் தேதி இரவு 12.30 மணிக்கு அரையிறுதியில் மோதுகிறது.
இன்று இரவு இங்கிலாந்து-நடப்பு சாம்பியன் பிரான்ஸ் ஆகிய அணிகள் இடையே காலிறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மொராக்கோ மோதும்.
Entering a tense final part of this one 🍿#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
அரபு நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.