மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்பு
மயிலாடுதுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மயிலாடுதுறையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையிலான பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஸ்பேர், எப்பி, ஃபாயில் ஆகிய மூன்று விதமான சண்டைகளில் 14 வயதுக்குட்பட்டோர் 17 வயதுக்கு உட்பட்டோர் 19 வயது உட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வீரர் வீராங்கனைகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள் அடுத்த மாதம் பெரம்பலூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான வாள் சண்டை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் 22 பள்ளிகளை சேர்ந்த 76 மாணவ - மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் இந்த போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவ்வகையில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 22 பள்ளிகளில் இருந்து 76 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளை பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன் தொடக்கி வைத்து பார்வையிட்டார். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை மற்றும் சிலம்பப் போட்டி 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை மற்றும் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு எடை மற்றும் வயது பிரிவில் 200 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக மோதி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதே போல சிலம்பப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
T20 World Cup 2024: டேய் எப்புட்றா... டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற உகாண்டா!