ISSF Junior World Cup 2023 : இந்தியாவிற்கு 2-வது தங்கம்.. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அசத்திய கெளதமி - அபினவ் ஜோடி!
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பையில், கெளதமி பானோட் மற்றும் அபினவ் ஷா ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பையில், கெளதமி பானோட் மற்றும் அபினவ் ஷா ஜோடி 16-12 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்சின் ஓசியான் முல்லர் மற்றும் ரோமெய்ன் ஆஃப்ரேரை வீழ்த்தி கலப்பு ஏர் ரைபிள் தங்கத்தை வென்றது.
Gautami Bhanot and Abhinav Shaw of India 🇮🇳 win Gold🥇with #Capapie in 10m Air Rifle Mixed Team at the ongoing ISSF Junior World Cup in Suhl, Germany. #ShootWithCapapie pic.twitter.com/5kTv8deZpw
— Capapie Sports (@CapapieSports) June 4, 2023
ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் சுஹ்லில் நடந்த சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் (ISSF) உலகக் கோப்பை ஜூனியர் போட்டியில் அபினவ் ஷா மற்றும் கௌதமி பானோட் ஜோடி 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.
அபினவ் ஷா மற்றும் கௌதமி பானோட் ஜோடி, பிரான்ஸ் ஜோடியான ஓசியன் முல்லர் மற்றும் ரோமெய்ன் அஃப்ரேர் ஜோடியை 17- 7 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த தொடரில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை வென்று கொடுத்தனர். இந்தியா இப்போது உலகக் கோப்பையில் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.
And its a GOLD 😍
— India_AllSports (@India_AllSports) June 4, 2023
India win Gold medal in 10m Air Rifle Mixed Team event at ISSF Junior Shooting World Cup.
➡️ Gautami Bhanot & Abhinav Shaw beat French duo 17-7 in Gold medal match. pic.twitter.com/bzgCmTPNZr
முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் சயின்யம் மற்றும் அபினவ் சவுத்ரி ஜோடி கொரிய ஜோடியான கிம் ஜூரி மற்றும் கிம் காங்யுன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றனர்.
இதே பிரிவில் சுருச்சி இந்தர் சிங் மற்றும் ஷுபம் பிஸ்லா ஜோடி உசெப்கிஸ்தானின் நிகினா சைட்குலோவா மற்றும் முகமது கமாலோவ் ஜோடியை 16-14 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற சயின்யம் மற்றும் அபினவ் 578 புள்ளிகள் பெற்று தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தனர். சுருச்சி மற்றும் இந்தர் 571 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கப் போட்டியில் இடம் பிடித்தனர்.
புள்ளி பட்டியல்:
இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்திலும், கொரியா ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஒரே ஒரு தங்கம் வென்று இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது.